'38 ஆயிரத்தை கடந்த தங்க விலை'... 'கவலையளிக்கும் விலையேற்றம்'... இன்றைய விலை நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பொருளாதாரம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதனால் தொழில் துறை உள்ளிட்ட பல துறைகள் அடியோடு முடங்கி உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றிலிருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.
இதன் காரணமாகத் தங்கத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் கொரோனா குறித்த அச்சம் இன்னும் முழுமையாக விலகாத நிலையில், தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறது. இந்தநிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.38,224 விற்பனை ஆகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து ரூ.4,778க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.60 அதிகரித்து ரூ.74.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 41296க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் 23 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5162க்கு விற்பனை செய்யப்படுகிறது.