கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில் துறை கடுமையான பாதிப்பைச் சந்தித்தது. மீது முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றிலிருந்த முதலீடுகளையும் மாற்றி, பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்தார்கள். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ததால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.

இதனிடையே கொரோனா குறித்த அச்சம் சிறிது விலகி நிலைமை சற்று கட்டுக்குள் வந்ததால், தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தது. இதற்கிடையே 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலையில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இருப்பினும் சில நாட்களுக்கு முன்பு தங்க விலை சற்று விலை உயர்வைச் சந்தித்தது.
இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1குறைந்து ரூ.4228க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.8 குறைந்து ரூ.33824க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.36952க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை 10 பைசா உயர்ந்து 1 கிராம் ரூ.71.80க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.71,800 ஆக உள்ளது.

மற்ற செய்திகள்
