'நேற்று கொஞ்சம் பயத்தைக் காட்டிய தங்க விலை'... 'இன்றைக்குக் கொஞ்சம் நிம்மதி'... இன்றைய நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Jeno | Mar 09, 2021 05:07 PM

பாதுகாப்பான முதலீடாக மக்கள் எப்போதும் பார்ப்பது தங்கத்தைத் தான். நடுத்தர மக்களுக்கு இக்கட்டான நேரங்களில் பொருளாதார தேவைகளுக்குத் தங்கம் பெரிய அளவில் உதவியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனா காரணமாகத் தொழில் துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்தது. அதே நேரம் உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர்.

Gold prices today close to lowest in 11 months

பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றிலிருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து நிலவி வந்தது.

இதற்கிடையே 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்த நிலையில் நேற்று தங்க விலை சற்று அதிகரித்தது. இதனிடையே இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

Gold prices today close to lowest in 11 months

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4183க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.33464க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37,720க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை வெள்ளியின் விலை 80 பைசா குறைந்து 1 கிராம் ரூ.70.20க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.70,200 ஆக உள்ளது.

Tags : #GOLD PRICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gold prices today close to lowest in 11 months | Business News.