'தங்கம் வாங்குவோருக்கு ஜாக்பாட்'... 'விலையில் அதிரடி மாற்றம்'... தொடர்ந்து நீடிக்குமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாதங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது தங்கம் வாங்குபவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், தங்கம் விலை உச்சத்தைத் தொட்டது. இது நடுத்தர மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலான மக்கள் நம்பிக்கையான முதலீடாகத் தங்கத்தைப் பார்ப்பதால், இனிமேல் சாதாரண மக்களால் தங்கத்தை வாங்க முடியாதோ என்ற எண்ணம் நடுத்தர மக்களிடையே ஏற்பட்டது. இந்த விலை உயர்வானது கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ஒரு சவரன் ரூ.43,328 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.
அதன்பின்னர் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாகக் காணப்பட்டது. நவம்பர் மாதத்தில் இதே நிலை தான் நீடித்தது. இந்த நிலையில் கடந்த 23ம் தேதி ஒரு சவரன் 37,984, 24ம் தேதி 37,120, 25ம் தேதி 36,912க்கும்,26ம் தேதி 36,904க்கும், 27ம் தேதி சவரன் 36,712க்கும் விற்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இன்று காலை 6வது நாளாகத் தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,574-க்கும் , சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,592-க்கும் விற்கப்பட்டது.
இதனிடையே தொடர்ச்சியாக 6 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,392 குறைந்துள்ளது. இது நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விலை குறைவால் நகைக்கடைகளில் விற்பனை அதிகரித்துக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.வெள்ளியின் விலை கிராம் ரூ.64.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற செய்திகள்
