www.garudabazaar.com

Video: 'சக்கரை' பொங்கலுக்கு வடகறி... டான்ஸ் 'ஆடி' கிண்டலடித்த சுரேஷ் சக்கரவர்த்தி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் டான்ஸ் நிகழ்ச்சி தொடர்ந்தது. இதில் நாம் முன்னரே சொன்னது போல ரேகா-ஜித்தன் இணைந்து ஜித்தன் படத்தில் இருந்து அ முதல் பாட்டுக்கு நடனம் ஆடினர். ஆரி-ரம்யா இணைந்து 'மாமா மாமா' பாடலுக்கும், சோம்-சம்யுக்தா இணைந்து வெண்ணிலவே பாடலுக்கும், ஆவலுடன் எதிர்பார்த்த பாலாஜி-ஷிவானி இணைந்து செல்லம்மா பாடலுக்கும் நடனம் ஆடினர்.

Suresh Chakravarthy mocked Som Sekhar-Samyuktha dance

ரேகா-ரமேஷ், ஆரி-ரம்யா ஜோடி ஓரளவுக்கு நன்றாக நடனம் ஆட, சோம்-சம்யுக்தா சுமாராக ஆடினர். செல்லம்மா பாடலில் ஷிவானி மட்டுமே ஸ்கோர் செய்தார். பாலாஜிக்கு நடனம் பெரிதாக வரவில்லை. இதைப்பார்த்த சுரேஷ் சக்கரவர்த்தி பின்னர் வெளியில் வந்து, சோமசேகர்-சம்யுக்தா இருவரின் நடனத்தையும் சக்கர பொங்கலுக்கு வடகறி மாதிரி இருந்தது என ஆடிக்காட்டி கிண்டல் செய்தார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் எங்க தலைவரு எப்பவுமே கண்டெண்ட்டுல கிங்கு அவரை மட்டும் தயவுசெஞ்சு வெளியில அனுப்பி வச்சிடாதீங்க பிக்பாஸ் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சீசன் டிஆர்பியை சுரேஷ் எக்கச்சக்கமாக எகிற வைக்கிறார் என்றும் அவரை புகழ்ந்து வருகின்றனர். நேற்று சின்ன மச்சான் பாடலுக்கு அனிதாவுடன் இணைந்து நடனம் ஆடி சுரேஷ் தெறிக்க விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Suresh Chakravarthy mocked Som Sekhar-Samyuktha dance

People looking for online information on Suresh Chakravarthy will find this news story useful.