www.garudabazaar.com

நாளைக்கு செம 'ட்ரீட்' இருக்கு... வெறித்தன வெயிட்டிங்கில் 'தளபதி' ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்களில் முக்கியமான இடம் மாஸ்டர் படத்துக்கு உள்ளது. தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'Quit Pannuda' Lyrical Video to be released on Tomorrow 6 PM

இந்த நிலையில் மாஸ்டர் படக்குழு முக்கிய அறிவிப்பொன்றை சற்றுமுன் வெளியிட்டு இருக்கிறது. அதாவது மாஸ்டர் படத்தில் இருந்து 'க்வைட் பண்ணுடா' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகும் என அறிவித்து இருக்கின்றனர். அத்துடன் புதிய போஸ்டர் ஒன்றையும் ரசிகர்களுக்கு விருந்தாக்கி உள்ளனர்.

படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ட்ரீட்டை ரசிகர்களுக்கு அளிக்க மாஸ்டர் படக்குழு முடிவு செய்துள்ளது. நாளை மாலை 6 மணிக்கு இந்த வீடியோ வெளியாக உள்ளது. இதையொட்டி தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தற்போது #QuitPannuda ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

'Quit Pannuda' Lyrical Video to be released on Tomorrow 6 PM

People looking for online information on Vijay Sethupathi will find this news story useful.