www.garudabazaar.com

'பத்த' வச்சிட்டியே பரட்ட... சுரேஷ் சக்கரவர்த்திக்கு 'பறக்கும்' மீம்ஸ்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரீ பாஸ் நிகழ்வில் மற்றவர்கள் பேசும்போது அமைதியாக இருந்த பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி பேசும்போது நேரடி ஒளிபரப்பை செய்து தன்னுடைய கடமையை நிறைவேற்றினார். (உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லை பாஸ்) இது தெரியாமல் அவர் அனிதா, ரியோ, நிஷா, வேல்முருகன் குறித்து பேச வெளியே தீபாவளி பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்து விட்டன.

Suresh Chakravarthy memes goes viral on Social Media

கடைசியில் அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் அவரை சக போட்டியாளர்கள் வறுத்தெடுத்தனர். ஆனால் அதற்கு எல்லாம் அவர் அசரவே இல்லை. நீங்க உங்க வேலைய பாருங்க நான் என் வேலைய பாக்குறேன் என்பது போல சாப்பிட ஆரம்பித்து  விட்டார். இதைப்பார்த்து சக போட்டியாளர்கள் டென்ஷன் ஆனது தான் மிச்சம். பிக்பாஸ் தான் பேசியதை போட்டு காண்பித்து விட்டார் என்று தெரிந்ததும் 'பத்த வச்சிட்டியே பரட்ட' என ஜாலியாக அவர் எடுத்து கொண்டது ரசிகர்களை கவர்ந்து விட்டது.

இதையடுத்து அவரை தயவுசெஞ்சு கொஞ்சநாள் உள்ளே வச்சிருங்க. அவர் போயிட்டா பிக்பாஸ் போரடிக்க ஆரம்பித்து விடும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். (வந்ததுல இருந்து அவர் மட்டும் தானே கண்டெண்ட் குடுக்குறாரு) இதை பிக்பாஸ் பரிசீலனை செய்வார் என எதிர்பார்க்கலாம் . ஏனெனில் சனம், அனிதா, ரியோ, வேல்முருகன் என அனைவரும் சண்டை போட்டது சுரேஷ் சக்கரவர்த்தியிடம் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தியின் மாஸ்டர் மைண்ட் கேமை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் அவருக்கு ஆர்மி ஆரம்பித்த கையோடு, மீம்ஸ் போட்டும் அவரது புகழை வெகுவாக பரப்பி வருகின்றனர். அதில் இருந்து ஒருசில மீம்ஸ்களை கீழே பார்க்கலாம்!

Suresh Chakravarthy memes goes viral on Social Media

People looking for online information on Suresh Chakravarthy will find this news story useful.