www.garudabazaar.com

Video: பாலாஜியோட டான்ஸ் 'ஜோடி' இவர்தான்... என்ன பாஸ் இப்படி பண்ணிட்டீங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் நேற்று தொடங்கிய டான்ஸ் நிகழ்ச்சி இன்றும் தொடரவிருக்கிறது. நான்கு ஜோடிகள் இன்னும் ஆடவேண்டி இருப்பதால் யாருக்கு யார் ஜோடி? என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் பாலாஜியின் டான்ஸ் பார்ட்னர் யார் என்பது தற்போது வெளியாகி இருக்கிறது.

Balaji Murugadoss and Shivani dance to Chellamma song

நேற்றே நாம்  சொன்னது போல ஷிவானி தான் அந்த டான்ஸ் பார்ட்னர். இருவரும் இணைந்து செல்லம்மா பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதனால் ஜித்தன் ரமேஷ்-ரேகா, சோமசேகர்-சம்யுக்தா, ஆரி-ரம்யா பாண்டியன் இணைந்து ஆடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. பாலாஜி,ஷிவானியை கிண்டலடிக்கும் காட்சிகள் நேற்று வெளியாகின.

அதேபோல பாலாஜியை நாமினேட் செய்வேன் என ஷிவானியும் கூறினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரெண்டு பேருக்கும் நடுவுல லவ் ஸ்டார்ட் ஆகும்னு பார்த்தா பைட் ஸ்டார்ட் ஆகிருச்சு என கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில் தற்போது இருவரையும் பிக்பாஸ் டான்ஸில் கோர்த்து விட்டுள்ளார். இனி என்ன நடக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

Balaji Murugadoss and Shivani dance to Chellamma song

People looking for online information on Balaji Murugadoss will find this news story useful.