www.garudabazaar.com

மனுஷன் 'அவருக்கே' tough குடுப்பாரு போல... என்ன ஒரு பெர்பாமன்ஸ்... முழு 'வீடியோ' உள்ளே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் லக்ஸுரி பட்ஜெட்டிற்கான ஜோடி டான்ஸ் நிகழ்ந்தது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் ஜோடிகளை தேர்வு செய்து பிக்பாஸ் டுவிஸ்ட் கொடுத்தார். முதல் பாடலான ரவுடி பேபிக்கு ஆஜித்-கேப்ரியலா இருவரும் இணைந்து ஆடினர்.

Suresh Chakravarthy dance is winning hearts on the Internet

2-வதாக ஆடலுடன் பாடலை கேட்டு பாட்டுக்கு நிஷா-ரியோ ஜோடி ஆடினர். 3-வதாக வச்சுக்கவா உன்ன மட்டும் பாடலுக்கு வேல்முருகன்-சனம் ஷெட்டி இணைந்து ஆடினர். 4-வதாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சின்ன மச்சான் பாடலுக்கு அனிதா-சுரேஷ் சக்கரவர்த்தி இணைந்து ஆடினர்.

வயதில் பெரியவராக இருந்தாலும் இளைஞர்களுக்கு ஈடு கொடுத்து பிக்பாஸை அசால்ட்டாக டீல் செய்து வரும் சுரேஷ் டான்ஸிலும் கலக்கி விட்டார். இதைப்பார்த்த அனைவரும் முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் எந்த டாஸ்க் கொடுத்தாலும் மனுஷன் பின்னி பெடலெடுக்கிறார் என அவரை புகழ்ந்து வருகின்றனர்.

டான்ஸ் டாஸ்க் நாளையும் தொடரும் என்பதால் யாருக்கு யார் ஜோடியாக ஆடுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர். அநேகமாக பாலாஜி-ஷிவானி, சோமசேகர்-சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ்-ரேகா, ஆரி-ரம்யா பாண்டியன் இணைந்து நடனம் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பாராததை எதிர் பாருங்கள்!

Suresh Chakravarthy dance is winning hearts on the Internet

People looking for online information on Suresh Chakravarthy will find this news story useful.