www.garudabazaar.com

நமக்கு எக்கச்சக்க 'எண்டெர்டெயின்மெண்ட்' இருக்கு... திடீரென குஷியான ரசிகர்கள்... என்ன ஆச்சு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த மூன்று சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஏகப்பட்ட இளம் போட்டியாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர். இதனால் நாளுக்குநாள் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இளமையான போட்டியாளர்கள் நிறைய இருந்தாலும் ஸ்கோர் செய்வது என்னவோ வயதில் மூத்தவரான சுரேஷ் சக்கரவர்த்தி தான். அனிதாவுக்கு-இவருக்கும் இடையிலான உரசல்களால் தினமும் ப்ரோமோவில் தவறாமல் இடம் பிடித்து வந்தார்.

Suresh Chakravarthy selected as a Captain in BB house

இந்த நிலையில் இந்த வாரத்தின் கேப்டனாக இவருக்கு புரமோஷன் கிடைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக செல்ல இவரும் முக்கிய காரணம் என்பதால் ஆரம்பத்தில் இவரை வெறுத்தவர்கள் கூட தற்போது ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு இவரை லைக் செய்ய ஆரம்பித்து வருகின்றனர். தற்போது கேப்டனாக இருப்பதால் இனிமேல் வீட்டுக்குள் எக்கச்சக்க பைட்டுகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐ வாண்ட் மோர் பைட் என கமல் முன்பே நேற்று இவர் சொன்னது குறிப்பிடத்தக்கது. அதிகம் ஹார்ட் பிரேக் சிம்பல்கள் பெற்ற ரேகா, ஷிவானி, சுரேஷ் சக்கரவர்த்தி மூவரில் சுரேஷ் அவர்களை கேப்டனாக கமல் முன்னிலையில் சக போட்டியாளர்கள் தேர்வு செய்தனர். இது ஆச்சரியமான விஷயம் தான் என்றாலும் ரேகா, ஷிவானியை விட சுரேஷ் சக்கரவர்த்தியை போட்டியாளர்களுக்கு பிடித்து போய் இருப்பதை இது காட்டுகிறது.

குறிப்பாக இன்று நடைபெற இருக்கும் நாமினேஷனின் போது கேப்டனை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பதால் இந்த வாரம் இவர் தப்பித்து விடுவார். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த வாரம் எக்கச்சக்க கண்டெண்ட் இருக்கும் என குஷியாக , மீம்ஸ் கிரியேட்டர்களோ டெம்ப்ளேட்களை தூசுதட்ட ஆரம்பித்து இருக்கின்றனர்.

இருக்கு இந்த வாரம் என்டெர்டெயின்மெண்ட் இருக்கு!

Suresh Chakravarthy selected as a Captain in BB house

People looking for online information on Suresh Chakravarthy will find this news story useful.