www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் வாழ்த்திய அந்த 3 பேர்! ... BiggBoss 5வது சீசன் கோலகல finale கொண்டாட்டம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சுமார் 100 முதல் 105 நாட்கள் வரை ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

sivakarthikeyan in biggboss5 tamil finale vijay tv kamalhaasan

கிராண்ட் ஃபினாலே

அதன்படி 105வது நாள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே வெற்றிகரமாக நடந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின், கிராண்ட் ஃபினாலேவில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்.

sivakarthikeyan in biggboss5 tamil finale vijay tv kamalhaasan

சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் 

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஆங்கராக இருந்து, பின்னர் நடிகராக மாறி, தற்போது முன்னணி நடிகராக திரையுலகில் வலம் வரக்கூடிய இளம் நடிகராக விளங்குகிறார். இந்தநிலையில் ஞாயிற்றுக் கிழமை நடக்கும் 105 ஆவது நாளான, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலேவில் கலந்துகொள்வதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் அழைக்கப்பட்டு இருக்கிறார்.

Also Read: எதிர்நீச்சல் அடி... ஜெயிச்சாப்புறம் trophy-யுடன் கெத்து காட்டும் ராஜூ.. தீயாய் பரவும் ஃபோட்டோ!

sivakarthikeyan in biggboss5 tamil finale vijay tv kamalhaasan

சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பார்ப்பதில் குஷியாகி இருக்கின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனால் முதலில் வரவேற்கப்பட்டார். அவருடைய பின்னணியில் டாக்டர் திரைப்படத்தின் இசை ஒலிக்கிறது.

டாக்டர் திரைப்பட தீம் மியூசிக்

sivakarthikeyan in biggboss5 tamil finale vijay tv kamalhaasan

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம், ‘டாக்டர்’. இத்திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, மற்ற திரைப்படங்கள் தியேட்டர்களில் நேரடியாக வெளியாவதற்கு உதவியாக இருந்ததாக பலரும் குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் டாக்டர் திரைப்பட மியூசிக் பின்னணியில் ஒலிக்க சிவகார்த்திகேயன் கெத்தாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுக்கிறார். அவரை வரவேற்ற நடிகர் கமல்ஹாசன் சிவகார்த்திகேயனை பேசச் சொல்லும் போது சிவகார்த்திகேயன் இந்நிகழ்ச்சி குறித்து பேசியிருக்கிறார்.

அனைத்து போட்டியாளர்களும் வெற்றியாளர்கள் - சிவகார்த்திகேயன்

sivakarthikeyan in biggboss5 tamil finale vijay tv kamalhaasan

Also Read: அட.. BiggBoss வீட்ல மொத்தமா இந்த மனுசன் அழுதது இந்த ரெண்டே இடத்துல தானா? ‘கூல்’ ராஜூ பாய்!

அதில் பேசிய சிவகார்த்திகேயன், “என்னால் நிச்சயமாக மூன்று மணி நேரம் அல்லது நான்கு மணி நேரம் கூட கையில் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது. அது மிகவும் சிரமம். ஆனால் இத்தனை நாட்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் செல்போன்கள் எதுவும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்திருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த அனைத்து போட்டியாளர்களும் வெற்றியாளர்கள் என்று தான் சொல்வேன். எனினும் குறிப்பாக அந்த மூன்று பேருக்கு வாழ்த்துக்கள்!” என்று சிவகார்த்திகேயன் குறிப்பிடுகிறார்.

அந்த 3 பேர்

sivakarthikeyan in biggboss5 tamil finale vijay tv kamalhaasan

இதில் சிவகார்த்திகேயன் குறிப்பிடும் அந்த மூன்று பேர் யார் என்கிற பட்டியல் மிக முக்கியமானது. முன்னதாக ராஜூ பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று விட்டதாகவும் பிரியங்கா ரன்னர் அப்பாக வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.  மேலும் இதற்கு அடுத்த வரிசைகளில், 3வதாக பாவனி, 4வதாக அமீர் , 5வதாக நிரூப் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் ராஜூ கையில் ட்ரோஃபியுடன் இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.

மருத்துவமனை சென்று திரும்பிய பிரியங்கா

sivakarthikeyan in biggboss5 tamil finale vijay tv kamalhaasan

பிரியங்காவை பொருத்தவரை, அவர் அண்மையில் தான் தன் உடல்நிலை கோளாறு காரணமாக பிக்பாஸிடம் சொல்லிவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்பு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த பிரியங்கா ரன்னர் அப்பாக வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவை அனைத்துமே தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கக் கூடிய நாள் பிக்பாஸ் ஃபினாலே. இதில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்திருக்கிறார்.

Also Read: “2021-ல மாஸ்டர் first.. 2வதா மாநாடு தான் 50 Days!!” .. Indian சினிமா History-லயே அதிக ரீமேக் ரைட்ஸ்! கிரியேட்டிவ் புரொடியூசர் KB ஸ்ரீராம் சொல்லும் ஆச்சரிய தகவல்கள்! Exclusive  பேட்டி!

தொடர்புடைய இணைப்புகள்

sivakarthikeyan in biggboss5 tamil finale vijay tv kamalhaasan

People looking for online information on Bigg boss 5 finale, Bigg Boss 5 Tamil, Bigg boss 5 title winner, Bigg boss 5 title winner raju, Bigg boss title winner raju, KAMALHAASAN, Sivakarthikeyan in biggboss, Sivakarthikeyan in biggboss 5, Sivakarthikeyan in biggboss finale, Sivakarthikeyan in biggbosstamil5, Vijay Television will find this news story useful.