www.garudabazaar.com

"சினேகன் - கன்னிகா ரவி" திருமணம்.. கமல் தாலி எடுத்து கொடுத்து கோலாகலம்! பிரபலங்கள் வாழ்த்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் 700 திரைப்படங்களுக்கு மேல், 2500 பாடல்களுக்கு குறையாமல் எழுதியவர் சினேகன்.

Lyricist snekan Kannika Ravi marriage in presence of kamalhaasan

பாடலாசிரியர் சினேகன் பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், பருத்திவீரன், ராம், ஆடுகளம், சாமி, சூரரைப்போற்று உள்ளிட்ட பல திரைப்படங்களில் பல வெற்றிப் பாடல்களை எழுதிய முன்னணி பாடலாசிரியராக திகழ்கிறார்.

Lyricist snekan Kannika Ravi marriage in presence of kamalhaasan

இவர் பிரபல சீரியல் நடிகை கன்னிகா ரவி என்பவரை தற்போது கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம் இன்று நடந்ததை அடுத்து, திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய, பிரபல விஜய் டிவி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்றிருந்தார் சினேகன். அதன் பிறகு கமல்ஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சி செயல்பாடுகளை சினேகன் மேற்கொண்டு வந்தார்.

Lyricist snekan Kannika Ravi marriage in presence of kamalhaasan

இந்த நிலையில் தான் கமல்ஹாசன் தலைமையில் கமல்ஹாசன் தாலி எடுத்து கொடுக்க சினேகன், கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த திருமணத்திற்குப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

Lyricist snekan Kannika Ravi marriage in presence of kamalhaasan

கன்னிகா ரவி தமிழில் கல்யாண வீடு உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நாயகியாக நடித்து இருக்கிறார். இதேபோல் சமுத்திரக்கனி நடித்த ‘அடுத்த சாட்டை’ உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.

தொடர்புடைய இணைப்புகள்

Lyricist snekan Kannika Ravi marriage in presence of kamalhaasan

People looking for online information on Kamal Haasan, Kannika, KannikaRavi, Snekan will find this news story useful.