www.garudabazaar.com

"கல்யாணம் எனும் குறுக்கீட்டால்".. பெண்களின் புதிய திருமண வயது ஒப்புதல் - கமல் பரபரப்பு Statement!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

kamalhaasan tweet over women marriage legal age raise amend

இதனிடையே நடிகர் கமல்ஹாசன், விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக கொரோனா காரணமாக நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். அந்த நேரத்தில்  நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

kamalhaasan tweet over women marriage legal age raise amend

அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் மீண்டும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். இந்நிலையில் தான் தற்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், பெண்களின் திருமண வயது உயர்வு குறித்த புதிய அமைச்சரவை ஒப்புதல் குறித்த தம் கருத்தை பகிர்ந்துள்ளார்.

kamalhaasan tweet over women marriage legal age raise amend

முன்னதாக குழந்தைத் திருமணங்களும் அகமணமுறை உள்ளிட்டவையும் இந்தியாவில் நடைமுறையில் இருந்தன. பல்வேறு அறிஞர்களாலும், புரட்சியாளர்களாலும் சமூக சீர்த்திருத்தவாதிகளாலும் இந்த நடைமுறைகள் மெல்ல் மெல்ல மாறி வந்திர்ருக்கின்றன.

kamalhaasan tweet over women marriage legal age raise amend

இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், “பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இது, பெண்களின் முன்னேற்றத்திற்கு பேருதவியாய் அமையும். கல்யாணம் எனும் குறுக்கீட்டால் பலரது கனவுகள் தடைபடுவதைத் தடுக்கும். இந்த சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

kamalhaasan tweet over women marriage legal age raise amend

People looking for online information on Kamal Haasan, Kamal hassan, Minimum marriage age of women, Women marriage age cabinet proposal, Women marriage age raise, Women marriage legal age will find this news story useful.