RRR Others USA
www.garudabazaar.com

"சொல்லு.. சொல்லு"... குக் வித் கோமாளி சீசன் 3.. சும்மா கலர்ஃபுல்லா வெளியான தெறி ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

CookWithComali3: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசனுக்கான தெறி ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Cook With Comali Season 3 Promo Vijay Television

முந்தைய சீசன்கள்

ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி 2 சீசன்களாக முடிவடைந்துள்ளது. இதில் முதலாவது சீசனில் ரம்யா பாண்டியன், வனிதா, பாலாஜி, ரேகா, உமா ரியாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னர் ஆனார். இதேபோல் 2வது சீசனில், கனி, அஷ்வின், ஷகிலா, ரித்திகா, தர்ஷா குப்தா உள்ளிட்டோர் குக்குகளாக் இடம் பெற்றனர்.

2வது சீசன் ஃபினாலே

இவர்களுடன் கோமாளிகளாக சுனிதா, சிவாங்கி, புகழ், பாலா, சரத், மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இந்த 2வது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நடிகர் சிம்பு வருகை தந்திருந்தார். செஃப் தாமு மிகவும் எமோஷனலாக பேசினார். 

குக் வித் கோமாளி 3வது சீசன்

இந்நிலையில் தான் தற்போது விஜய் டிவியில் வெளியாகியுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசனுக்கான புதிய ப்ரோமோவில், சிவாங்கி, சுனிதா, பாலா, மணிமேகலை ஆகியோர் இடம் பெறுகின்றனர். இவர்களுடன் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பாத் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

அத்துடன் பொதுமக்கள் சிலர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றிய தங்கள் கருத்துக்களை கூறுவதும் இந்த ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. அவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சிலாகித்து பேசுகின்றனர். இந்த ப்ரோமோவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3-க்காக ஒரு குட்டிப்பாடலும் இடம் பெறுகிறது.

சொல்லு.. சொல்லு 

“சொல்லு.. சொல்லு.. குக் வித் கோமாளி சீசன் 3 சொல்லு.. சவுத் சொல்லு.. நார்த் சொல்லு.. ஈஸ்ட் சொல்லு, வெஸ்ட் சொல்லு.. சொல்லு.. சொல்லு.. குக் வித் கோமாளி” என்கிற வரிகளை கோரஸாக அனைவரும் பாட செம கலக்கலாகவும், கலர்ஃபுல்லாகவும் வெளியாகியுள்ள இந்த ப்ரோமோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விரைவில் இந்த சீசன் வெளியாகவுள்ளதாகவும் இந்த ப்ரோமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Also Read: இனி தமிழில்.. ‘பத்தே செகண்ட்’ வீடியோ தான்.. Trend ஆகும் விஜய் டிவி வெளியிட்டுள்ள புதிய Promo!

Cook With Comali Season 3 Promo Vijay Television

People looking for online information on Cook with comali 3, Cook With Comali 3 Promo, Cook With Comali Season 3, Cook with comali season 3 promo, CWC 3 will find this news story useful.