மாநாடு 50 Days!!” ..கிரியேட்டிவ் புரொடியூசர் KB ஸ்ரீராம் சொல்லும் ஆச்சரிய தகவல்கள்! Exclusive பேட்டி!
முகப்பு > சினிமா செய்திகள்2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே.சூர்யா, வாகை சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ், பிரேம்ஜி மற்றும் பலர் நடிச்ச இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தை, V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்தார்.இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
Time Loop வகையறாவாக வெளிவந்த மாநாடு படத்தின் ஸ்கிரீன்ப்ளே பெருவாரியான ரசிகர்களையும் திரையுலக ஜாம்பவான்களையும் ஈர்த்தது. சில பல தடைகளை தாண்டி நவம்பர் 25-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகிய மாநாடு படம், பின்னர் 2021 டிசம்பர் 24 அன்று முதல் SonyLIV OTT-யில் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியது.
மாநாடு படத்தின் பிசினஸ், ரிலீஸ், Distribution என எல்லா இடங்களிலும் மிகவும் நெருக்கமாக இருந்து பணிபுரிந்த KB ஸ்ரீராம், கிரியேட்டிவ் புரொடியூசர், ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட். அவரிடம் திரைப்படங்கள், வியாபாரம், நடிகர்களின் மார்க்கெட், ஓடிடி உள்ளிட்டவற்றை பற்றி கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு தம்முடைய அனுபவ ரீதியான சுவாரஸ்யமான பதிலை நம்மிடையே பிரத்தியேகமாக இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
ஒரு திரைப்படம் எவ்வளவு நல்லா உருவாகியிருந்தாலும், அதை கொண்டு சேர்க்குற விநியோகஸ்தர்களின் பங்கு முக்கியமானது. அந்த வகையில், மாநாடு படம் விநியோகஸ்தர்களுக்கு எந்த மாதிரி வெற்றியை கொடுத்திருக்கு?
இப்படத்தின் மூலமாக சின்ன சின்ன விநியோகஸ்தர்கள் வரைக்கும் லாபம் அடைஞ்சிருக்காங்க.. இனி அடுத்தடுத்த படங்களில் அவங்க முதலீடு செய்ய முடியும், இது ஒரு இண்டஸ்ட்ரியில் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான விஷயம். இப்படிப்பட்ட ஒரு பாண்டமிக் சூழலில் கூட, மாநாடு திரையரங்குகள்ல வெளியாகி 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடியிருக்கு. இந்த வெற்றி சாத்தியப்பட்டிருக்குன்னா அதுக்கு முக்கியமான காரணம் இயக்குநர் வெங்கட் பிரபு தான். அவரோட நுணுக்கமான ஸ்கிரீன்ப்ளே. இந்த கிரெடிட் எல்லாமே அவருக்கு தான்.
Also Read: அடி தூள்.. RJ பாலாஜி இயக்கி நடிக்கும் புதிய படத்தில் இணைந்த பிரபல இளம் நடிகை!
மாநாடு படத்துல நடிகர்கள், இயக்குநர் தாண்டி டெக்னீசியன்களின் உழைப்பு கவனிக்கப்பட்டிருக்கே?
நிச்சயமா.. மாநாடு படத்தை பொறுத்தவரை டெக்னீசியன்களின் உழைப்பு பெரிய அளவுல பேசப்பட்டிருக்கு.. ஒவ்வொரு டெக்னீசியனும் ரொம்ப நுணுக்கமா வொர்க் பண்ணிருக்காங்க. பிரவீன் கே.எல்க்கு இது 100வது படம். அவரோட எடிட்டிங் படத்துக்கு பலம். யுவன் ஒரு பாட்டு தான் பண்ணிருக்கார். ஆனா, இசையும் பின்னணி இசையும் படத்தோட விறுவிறுப்புக்கு பெரிய அளவுல சப்போர்ட் பண்ணிருக்கு.
So டெக்னீசியன்களோட மார்க்கெட் வேல்யூ இந்த படத்துக்கு அப்றம் கணிசமா உயரும். இயக்குநர்ல இருந்து, படத்தின் கடை நிலை ஊழியர்கள், எல்லாருக்குமே அவங்க கரியர்ல அடுத்த ஸ்டெப்க்கு போறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.
2021-ல ஆண்டு தமிழ் சினிமா இண்டஸ்ட்ரில நல்லா ஓடி பிளாக் பஸ்ட்ர் வெற்றி அடைஞ்ச 5 திரைப்படங்கள்..?
நம்ம கிட்ட இருக்கே.. கெத்தா சொல்லலாம். 2021-லயே மாஸ்டர் படம்தான் 50 நாள் வெற்றிகரமா ஓடிருக்கு.. அதுக்கு அடுத்ததா 2வது படமாக மாநாடு படம் 50 நாட்கள் ஓடிருக்கு. So மாஸ்டர், மாநாடு, கர்ணன், டாக்டர், அண்ணாத்தலாம் பிளாக் பஸ்டர் ஹிட் அடிச்ச படங்கள் ..
ஓடிடி ரிலீஸ் படங்கள் மக்களை சென்று சேருதாங்குறதே கேள்வியா இருக்கும்போது அதுல ‘ஹிட்’ அப்படிங்குற பேச்சுக்கு இடம் இருக்கா?
ஏன் இல்ல.. எல்லாமே Content தான். 2021-ல ஓடிடியில் ரிலீஸ் ஆன சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம் படங்களை எடுத்துக்கங்க... டிஜிட்டல் பிசிஸன்ஸ்லயும் புரொடியூசருக்கு அதிக லாபம் சம்பாதிச்சு கொடுத்த தமிழ் படங்கள் இதெல்லாம்.
சரி.. இப்படி வெச்சுக்குவோம்.. ஒருவேளை ‘டாக்டர்’ படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகாம, ஓடிடியில் ரிலீஸ் ஆகிருந்தா சிவகார்த்திகேயன் மார்க்கெட் உயர்ந்திருக்குமா?
அப்படி இல்ல. ‘டாக்டர்’ படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு, படமும் பிளாக் பஸ்டர். நிச்சயமா சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அதிகரிச்சிருக்கும். ஆனா ஓடிடியில் ரிலீஸ் ஆகிருந்தா சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உயர்ந்திருக்காது! கேட்க கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கலாம்.
ஆனால் ஒரு ஹீரோவின் மார்க்கெட் லெவலை தியேட்டரில் ரிலீஸ் ஆகும் ஒரு படம்தான் தீர்மானிக்குது. OTT-யில் ரிலீஸ் ஆகுறத பொருத்து ஹீரோவோட மார்க்கெட் லெவல் உயராது.
Also Read: கார்த்தி நடிக்கும் 'விருமன்' படத்தின் கதைக்களம் இது தான்! முதல் முறையாக சொன்ன இயக்குனர்..
இப்போ சமீபமா டோலிவுட் நடிகர்களுக்கு கோலிவுட்லயும், கோலிவுட் நடிகர்களுக்கு டோலிவுட் கிடைக்குற ரெஸ்பான்ஸ் அவங்க மார்க்கெட்டுக்கு உதவுமா?
100%. இந்த 2 இண்டஸ்ட்ரியும் நல்லா கம்பைன் ஆயிட்டு இருக்கு. தாரணமா வெங்கி அட்லுரி, சேகர் கம்முலா ஆகிய தெலுங்கு இயக்குநர்கள் இயக்குற தமிழ்- தெலுங்கு படத்துல தனுஷ் நடிக்கிறார்.
அனுதீப் இயக்கத்துல சிவகார்த்திகேயன், வம்சி பைடிபல்லி இயக்கத்துல விஜய்னு நடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதன் மூலம் தெலுங்கு வட்டார சினிமாவின் நேரடி மார்க்கெட்டை இந்த தமிழ் ஹீரோக்களால் பிடிக்க முடியும்.
2021-ல கோலிவுட் & பான் இந்திய மார்க்கெட்டை வேற மொழி நடிகர்கள் பிடிக்க முடிஞ்சிருக்கா?
பாகுபலி, சாஹோ, அடுத்ததா ரிலீஸ் ஆக போற ராதே ஷ்யாம் மூலமா நடிகர் பிரபாஸ் பான் இந்திய மற்றும் கோலிவுட் மார்க்கெட்டை பிடிக்கிறாரு. புஷ்பா படம் மூலமா அல்லு அர்ஜூன் பிடிச்சிருக்காரு. புஷ்பா படம், ஒரு டப்பிங் படமா ரிலீஸ் ஆனாலும் இதுக்கு முன்னாடி இருந்த ரெக்கார்டுகளை பிரேக் பண்ணுன படம்.
இதே மாதிரி ஷ்யாம் சிங்க ராய் படம் மூலமா நானி.. இவங்க வரிசையில குரூப் படம் மூலமா துல்கசர் சல்மானை சொல்ல முடியும். 2021-ல Mollywood-ல இருந்து Pan India மார்க்கெட்டை பிடிக்க ஆரம்பிச்சிருக்காரு.
அப்போ 2022-ல தியேட்டர் ஓனர்களுக்கும் distributors-க்கும் பெரிய ட்ரீட் இருக்குனா.. அது எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆகுறதுனால?
நிறைய இருக்கே ... RRR, வலிமை, எதற்கும் துணிந்தவன், யானை, பிசாசு-2, ராக்கெட்ரி, விக்ரம் , KGF-2, Beast , பொன்னியின் செல்வன்-முதல் பாகம்னு லிஸ்ட் நீளுது.
இந்த படம்லாம் இந்த வருஷத்துல ரிலீஸ் ஆனா, கலெக்ஷன் ரீதியா கோலிவுட், டோலிவுட், இல்ல பான் இந்திய படங்களாக இந்த படங்கள் முந்தைய ரெக்கார்டுகளை கண்டிப்பா பிரேக் பண்ண நிறையவே சான்ஸ் இருக்கு..
மற்ற மொழிகளில் பெருசா ரிலீஸ் ஆகாத ஒரு தமிழ்ப் படம் மாநாடு, அப்போ அது ஒரு PAN Indian படமா?
ஆமா, மாநாடு ஒரு PAN Indian படம்தான். ஏன்னு சொல்றேன். மாநாடு படம் தியேட்டருக்கு அப்றம் OTT-யிலயும் ரிலீஸ் ஆகி, இப்போ பல மொழி audience-ஐ ரீச் பண்ணிருக்கு.
இன்னொன்னு சொல்றேன், 2021-ல இந்தியன் சினிமா ஹிஸ்டரியிலேயே, அனைத்து மொழிகளிலும் ஹையஸ்ட் ரீமேக் ரைட்ஸ் போன ஒரே இந்திய படமும் மாநாடுதான். அதுவும் சல்மான் கானுக்கோ, ஷாருக் கானுக்கோ போகாத அளவுக்கு ரீமேக் ரைட்ஸ் போயிருக்கு!
Also Read: கமல்ஹாசனோடு இணைந்த சிவகார்த்திகேயன்! வெளியான தெறி மாஸ் புதிய அறிவிப்பு
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vijay Tv Biggboss Season 5 Title Winner பிக்பாஸ் டைட்டில் வின்னர்
- 18 Years Of Virumandi Movie Kamal Haasan Master Piece
- Why Priyanka Went Out What Happened Biggboss5 Day 103 EP Vijay Tv
- Simbu Emotional Tweet On Maanaadu 50th Day Celebration
- 1st Single From Hari Direction Arun Vijay Starrer "Yaanai"
- Priyanka In Biggboss Season 3 Vijay Tv Biggboss5 Video Viral
- One Year Of Master Lokesh Kanagaraj Shares BTS Image
- Maanaadu Blockbuster 50th Day Statement From Producer
- Vijay Tv Bharathi Kannamma Sun TV Sundari Serial Common Factor
- Vijay Sethupathi Again Share Screen With Biggboss Actress Shivani
- Venba Started To Have Hallucination Bharathi Kannamma Vijay Tv
- Silambarasan TR Get Honorable Doctorate At Vels University
தொடர்புடைய இணைப்புகள்
- Sivaangi 🥺 Break Up Hurt ஆகத்தான் செய்யும்...திடீர்னு Sivaangi உருக்கம் !
- 'வாத்தி கம்மிங்.. ஒத்தே'🔥 1 Year Of JD Vs பவானி சம்பவம்💥 'உள்ள வந்தா பவரடி.. அண்ண யாரு தளபதி'
- കിടിലൻ Makeover-ൽ Deepti Sati 😍😍😍
- Sivaangi As Foodie 😍 Sivaangi-ய Singer, Comali-யா பார்த்திருப்போம், Foodie-ஆ இப்பதான் பார்க்குறோம்
- Vijay Vs Vijay Sethupathy Master Fight Scene Making Video
- Allu Arjun மகளுடன் Butta Bomma Dance ஆடிய Pooja Hegde 😍
- Ramuloo Ramulaa Song-ന് ചുവടുവെച്ച് Pooja Hegde💃💃💃 | Cute Dance 😍😍
- சிம்புவுடன் மேடையில் ஜொலித்த பெண் யார்? ட்விட்டரில் அலசி தள்ளிய நெட்டிசன்கள்..!
- தலைப்புச்செய்திகள் | TODAY HEADLINES | "பெண்களுக்கு மாதம் ரூ.1000" | மக்கள் பணியில் விஜய் இயக்கம்
- Just Married Things Blooper -02 | Jeeva Joseph | Sreevidya Mullachery | Aparna Thomas
- எஸ்.ஜே.சூர்யா | அட.. சமீபத்திய இயக்குநர்கள் இத்தனை பேர் வேற டைரக்டர் படங்களில் ‘போலீஸா’ நடிச்சுருக்காங்களே! - Slideshow
- Unga Gang La Yaaru Ipdi Panuvanga 😂💥