www.garudabazaar.com

BiggBossTamil5:டூடுடு.. டூடுடு.. டுட்டூ டூடூ.. இந்த வாரம் 2 Eimination-ஆ?.. Promo-வில் தெறிக்கவிடும் கமல்ஹாசன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 2021, டிச.26:  விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில், ஹவுஸ் மேட்ஸ் சுமார் 80 நாட்களை கடந்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் எலிமினேஷன் தொடர்பாக கமல் இடம்பெறும் புதிய ப்ரோமோ வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 எலிமினேஷன்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

kamalhaasan symbolic action biggboss elimination vijay tv promo

Vijay Television BiggBoss 5 Tamil: பல்வேறு கடுமையான டாஸ்க், நெருக்கடியான போட்டிகள் இருந்தாலும் குறிப்பாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் போட்டியாளர்களுக்கு இடையே ஒரு புதிய பெயர் உருவாகியிருக்கிறது. அதன்படி இவர்கள் அனைவருமே டாஸ்குகளின்போது மட்டும் தான் சண்டை போட்டுக் கொள்வார்கள், மற்ற நேரங்களில் புரிதலுடன் இயல்பாக நடந்து கொள்வார்கள் என்பது இவர்களுக்கு இவர்கள் மீது மக்களுக்கு உண்டாகியிருக்கும் புரிதலாக இருக்கிறது.

kamalhaasan symbolic action biggboss elimination vijay tv promo

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் வார இறுதியில் வந்து போட்டியாளர்களை சந்தித்து பேசத்தொடங்கினார். அவரே இந்த விஷயத்தைச் சொன்னார். அதாவது இப்போது இருக்கும் இந்த போட்டியாளர்கள் போட்டிகளின்போது மட்டுமே சண்டை போட்டுக் கொள்வதாகவும், மற்ற நேரங்களில் புரிதலுடன் இருப்பதாகவும் கூறினார்.

#BiggBossTamil5 Elimination

அதே சமயம் இனி ஒவ்வொருவரும் தங்களுடைய விளையாட்டை தீவிரமாக விளையாட வேண்டும், அதற்கு தங்களுடைய நிறை, குறைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களின் நிறைகுறைகளை தனித்தனியே கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து சுட்டிக்காட்டினார். ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் அறிவிக்கப்படும். அப்படிதான் இதுவரை எலிமினேஷன் அறிவிக்கப்பட்டு வந்தது.

kamalhaasan symbolic action biggboss elimination vijay tv promo

முன்னதாக நமீதா மாரிமுத்துவை தவிர்த்து நாடியா, சின்னபொண்ணு, அபிஷேக், சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அண்ணாச்சி, அபினய் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர்.

kamalhaasan symbolic action biggboss elimination vijay tv promo

இதேபோல் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அமீர், சஞ்சீவ் ஆகியோர் உட்பட தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் கிராண்ட் ஃபினாலே ரேஸை நோக்கி தயாராக இருக்கின்றனர்.

போட்டியாளர்களின் உறவினர்கள், நெருங்கியவர்கள்!

இதனிடையே பிக்பாஸ் போட்டியாளர்களை பார்ப்பதற்கு அவர்களின் உறவினர்கள், நெருக்கமானவர்கள் சிலர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து போனார்கள். வந்தவர்கள் சம்பந்தப்பட்ட அந்த போட்டியாளர்கள் பற்றிய தங்களுடைய பார்வையையும் வெளியுலகத்தில் மக்களிடையே அவர்களுக்கு இருக்கும் மதிப்பீடுகளையும் முன்வைத்தனர்.

kamalhaasan symbolic action biggboss elimination vijay tv promo

இதேபோல் மற்ற போட்டியாளர்களிடமும் அவர்களின் நிறை குறைகளை கூறி விட்டுச் சென்றனர்.

இந்த வாரம் 2 எலிமினேஷன்?

இந்த கட்டம் தற்போது முடிந்துள்ள நிலையில், அடுத்த எலிமினேஷன் தொடர்பான பேச்சுகள் எழுந்திருக்கின்றன. அதன்படி, அடுத்த எலிமினேஷன் தொடர்பாக  நடிகர் கமல்ஹாசன் பங்குபெறும் ஒரு புதிய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. 

kamalhaasan symbolic action biggboss elimination vijay tv promo

இதில் கமல்ஹாசன் பலவிதமான சைகைகளை காட்டுகிறார். குறிப்பாக இரண்டு விரல்களை காண்பிக்கிறார். இது என்ன குறிப்பு என்று சிலர் யூகித்து வருகின்றனர். அதாவது இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கலாம் என்பதற்கு கமல்ஹாசன் இப்படியான குறிப்புகளைக் காட்டலாம் என்றும் கூறிவருகின்றனர்.

kamalhaasan symbolic action biggboss elimination vijay tv promo

அந்த 2 பேர் யார்? உண்மையில் 2 பேர் இந்த வாரம் எலிமினேட் ஆகிறார்களா? உள்ளிட்ட முழுவிபரம் எபிசோடில் தான் தெரியவரும்!

தொடர்புடைய இணைப்புகள்

kamalhaasan symbolic action biggboss elimination vijay tv promo

People looking for online information on Biggboss 5 tamil today promo, Biggboss elimination, Biggboss promo, Biggboss today elimination, Biggboss5 elimination, Biggboss5 promo, KAMALHAASAN, Kamalhasan, Star vijay will find this news story useful.