எதிர்நீச்சல் அடி... ஜெயிச்சாப்புறம் trophy-யுடன் கெத்து காட்டும் ராஜூ?.. தீயாய் பரவும் ஃபோட்டோ!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி 105 எபிசோடுகளுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடையப் போகிறது.

BiggBossTaml5
இதற்கு முன்புவரை 4 சீசன்கள் பிக்பாஸ் வீட்டில் நிறைவடைந்தன. முதல் சீசனில் ஆரவ் மற்றும் 4வது சீசனில் ஆரி ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த 5வது சீசனை பொருத்தவரை போட்டியாளர்கள் அனைவருமே, டாஸ்குகளின்போது சண்டை போட்டுக்கொள்வதுடன் மற்ற நேரங்களில் நட்புடன் இருந்து வந்தனர்.
தாமரை வெளியேற்றம்
இந்நிலையில் தாமரை பிக்பாஸ் வீட்டில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருப்பதாக பலராலும் கருதப்பட்டது. ஆனால் கடைசிவரை வந்த தாமரை, கடைசி வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். அவருடைய வெளியேற்றம் எதிர்பாராததாகவும், ஏமாற்றமாகவும் இருந்ததாக கமல்ஹாசனே தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் நிரூப், ராஜூ, பிரியங்கா, அமீர் மற்றும் பாவனி ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வந்தனர். இவர்களுள் அமீர் ஏற்கனவே டிக்கெட் டூ ஃபினாலேவில் டிக்கெட்டை பெற்று நேரடியாக நாமினேஷனின்றி, இறுதி வாரத்தில் நடக்கும் ஃபினாலேவுக்கு சென்றார்.
பிக்பாஸ் கோப்பை
இந்நிலையில் இந்நிகழ்சியில் ஜெயிக்கப்போவது யார், அந்த பிக்பாஸ் கோப்பையை கைப்பற்ற போவது யார் என்பன போன்ற மில்லியன் டாலர் கேள்விகளுக்கு பதிலாக, பிக்பாஸ் வீட்டில் ராஜூ ஜெயமோகன் வெற்றி பெற்றிருப்பதாக செய்திகள் ஏற்கனவே வெளியாகத் தொடங்கிவிட்டன. இதனை அடுத்து ராஜூ தன் trophy-யுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காமெடி, கலாய்ப்பு, நக்கல், நைய்யாண்டி
விஜய் டிவி சீரியல்களில் நடித்த ராஜூ ஜெயமோகன், இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர். பிக்பாஸ் வீட்டில் ராஜூ இருக்கும்போது அவரை காண அவரது மனைவி வந்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முழுவதும் காமெடி, கலாய்ப்பு, நக்கல், நைய்யாண்டி என கலகலப்பான பாணியில் நிறை குறைகளை சொல்லி வந்த ராஜூ, தான் செய்த தவறுகள் குறித்தும் அவ்வப்போது பேசியுள்ளார். அவற்றுக்காக சில போட்டியாளர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
Thuglife செய்வதில் பேர் போனவர்
இப்படி மக்கள் மனதில் இதயம் வென்ற ராஜூ ஜெயமோகன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த 5வது சீசனில் Thuglife செய்வதில் பேர் போனவர். ஒரு சில இடங்களைத் தவிர மற்ற நேரங்களில் தன்னுடைய நிலையை இழக்காமல் எப்போதும் கூலாக இருந்தவர் என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.