www.garudabazaar.com

BiggBoss பரபரப்பான 92வது Episode! இந்த வார Elimination-ஐ அறிவித்த கமல்ஹாசன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBoss, Vijay Television: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட போட்டியாளர்கள் 91 நாட்களை கடந்து பிக்பாஸ் வீட்டில் வசித்து வருகின்றனர்.

biggbosstamil5 kamalhaasan announced 92 episode elimination

BiggBossTamil5: ஏறக்குறைய அனைவருமே பிக்பாஸ் வீட்டை பிரிய கூடிய சூழல் வந்துவிட்டது என்ற போதிலும் ஒவ்வொருவரிடமும் பிக்பாஸ் வீட்டை பிரிவது குறித்து கமல்ஹாசன் கேட்கும்பொழுது அனைவருமே மிகவும் நெகிழ்ந்து போய் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வதற்கு மனமே இல்லை என்று பேசி வந்தனர்.

கிராண்ட் ஃபினாலே ரேஸ்

ஓரிரு வாரங்களுக்கு முன்பே கிராண்ட் ஃபினாலே ரேஸ் தொடங்கியதை அடுத்து, போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து போட்டியாளர்களும் மிகவும் தீவிரமாக தங்களுடைய பங்களிப்பை காட்டி வந்தனர். மக்களுடைய ஓட்டு, பிக்பாஸ் வீட்டுக்குள் சக போட்டியாளர்களின் நாமினேஷன் உள்ளிட்ட பல காரணிகள் போட்டியாளர்களின் இருப்பு மற்றும் நீட்டிப்பு உள்ளிட்டவை தீர்மானிக்கப்படுவதற்கு காரணமாக அமைகின்றன.

biggbosstamil5 kamalhaasan announced 92 episode elimination

வார இறுதியில் கமல்ஹாசன் தோன்றி போட்டியாளர்களின் நிறை குறைகளை சுட்டிக்காட்டி விமர்சிக்கவும் பாராட்டவும் செய்வார். அந்த வகையில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் அமீர் வெற்றி பெற்றதையடுத்து, அவர் கௌரவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் காப்பாற்றப்படப் போகிறார்கள்? யார் நாமினேஷனில் இருக்கப் போகிறார்கள் என்கிற பேச்சு எழுந்தது.

Also Read: ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு நிச்சயதார்த்தம்!..  மாப்பிள்ளை யார் பாருங்க! வெளியான வைரல் Post!

டிக்கெட் டூ ஃபினாலே

ஏறக்குறைய கடந்த வாரங்களில் பிக்பாஸ் அனைவரையுமே நாமினேட் செய்திருந்தார். இதில் கடைசியாக நடந்த டிக்கெட் டூ ஃபினாலேவில் வெற்றி பெற்றதால் அமீர் நாமினேஷன் இடம்பெறவில்லை. மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்தனர். இந்த நிலையில் இந்த வார இறுதியில் பேசிய கமல்ஹாசன் நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் அரங்கிலிருந்த ஆடியன்ஸ் சிலரிடம் யாரைக் காப்பாற்றப் போகிறார்கள் என்று கேள்வி கேட்டார்.

biggbosstamil5 kamalhaasan announced 92 episode elimination

ஆடியன்ஸால் காப்பாற்றப்பட்டவர்கள்

இதில் ஒரு போட்டியாளர் ராஜூவை காப்பாற்றினார். இன்னொரு போட்டியாளர் பாவனியை காப்பாற்றினார். அதன் பிறகு பேசிய இன்னொரு போட்டியாளர் தாமரைச்செல்வியை காப்பாற்றினார். பிக்பாஸ் நிகழ்ச்சி அரங்கத்தில் இருக்கும் இந்த பார்வையாளர்கள் நீண்ட காலமாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளை அவதானித்து வருகின்றனர்.

Also Read: ஜீவா.. ஜெய்.. ஸ்ரீகாந்த்.. ஆஹா.. செம்ம Combo-வா இருக்கே! இயக்கப் போகும் டைரக்டர் இவரா?! தரமான சம்பவம் Loading..

அந்த அடிப்படையில் இவர்கள் தாங்கள் விரும்பும் பிரபல போட்டியாளர்களை காப்பாற்றுவதற்கு கோரினர்.உடனே அந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு குறிப்பிட்ட அந்த போட்டியாளர்கள் காப்பாற்றப் படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்கிற பட்டியலில் சிபி மற்றும் சஞ்சீவ் இரண்டு பேரும் இடம் பெற்றனர்.

biggbosstamil5 kamalhaasan announced 92 episode elimination

இதில் நடிகர் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதனைதொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் இருந்து விடைபெற்று வெளியேறிய, சஞ்சீவ், பிக்பாஸ் வீட்டுக்குள் வரும்பொழுது கமல்ஹாசனை பார்க்க முடியாமல் போனதாகவும் இந்த இறுதி நேரத்தில் கமல்ஹாசனை பார்த்து ஆசி பெற்று மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Also Read: செம ட்ரீட்..! ஒரே ஆடியோவில் ஸ்ட்ரீம் ஆகும் ‘வலிமை’ ட்ராக்ஸ் .. End-ல Theme மியூசிக் வேறமாரி!

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே 2 படங்களில் ஹீரோ 

இதேபோல் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பொழுது சஞ்சீவின் குடும்பத்தினர் வந்து அவரை பார்த்தனர். அவர்கள் சொன்னதாக சொல்லி ஒரு தகவலை மீண்டும் கமல்ஹாசன் முன்னிலையில் சஞ்சீவ் குறிப்பிட்டார். அதன்படி பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பொழுதே சஞ்சீவ்க்கு அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்திருக்கின்றன.

biggbosstamil5 kamalhaasan announced 92 episode elimination

உங்களுக்கு அனுபவம் இருக்கு!

இந்த நிலையில் இது குறித்து பேசிய கமல்ஹாசன், “இங்கு இருக்கும் அனைவருக்கும் இப்படியான வாய்ப்புகள் வருகின்றன. அதை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம். உங்களுக்கு இந்த விஷயத்தில் ஏகப்பட்ட அனுபவங்கள் இருக்கின்றன. அதனால் நீங்கள் அதை சரியாக பயன்படுத்துவீர்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது!” என்று சொல்லி வழியனுப்பி வைத்தார்.

biggbosstamil5 kamalhaasan announced 92 episode elimination

அக்கா சிந்து, நண்பர் விஜய்

நடிகர் சஞ்சீவ் நடிகர் விஜய்யின் கல்லூரி தோழர் என்பதுடன் விஜய் திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். இதேபோல் சஞ்சீவின் அக்காதான், மறைந்த பிரபல நடிகை சிந்து. அவரது மரணம் பற்றிய உருக்கமான கதையை சஞ்சீவ் பிக்பாஸில் தெரிவித்தபோது அனைவருமே கண்கலங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: போடு!! கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா, ரகுமான், சரத்குமார்.. தெறிக்கவிடும் டைட்டில் லுக்!

biggbosstamil5 kamalhaasan announced 92 episode elimination

People looking for online information on Biggboss elimination, Biggboss eviction, Biggbosstmil5 will find this news story useful.