ஆஹா..DON படத்தின் OTT ஒளிபரப்பு உரிமை.. கைப்பற்றிய முன்னணி நிறுவனம்! போடு வெடிய

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும்,திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது.

Sivakarthikeyan DON Movie OTT Rights bagged by Netflix

இப்படத்தை LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும்  SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். SJ சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பல  பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

Sivakarthikeyan DON Movie OTT Rights bagged by Netflix

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது.

அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகியுள்ள ஜலபுல ஜங்கு மற்றும் பே (bae), Private Party ஆகிய பாடல்கள் சமூகவலைதளங்களில் ஹிட்டடித்துள்ளன. டான் திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் கடந்த ஆண்டு இறுதியிலேயே முடிந்த நிலையில் மார்ச் 25 அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். 

ஆனால் அதே நாளில் ராஜமௌலியின் பிரம்மாண்ட படமான ஆர் ஆர் ஆர் வெளியாக இருந்தது. மேலும் அந்த படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமம் லைகா நிறுவனம் வாங்கியிருந்தது. இதனால் டான் படத்தின் ரிலீஸ் தேதி மே 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து லைகா நிறுவனம் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்திருந்தது.

Sivakarthikeyan DON Movie OTT Rights bagged by Netflix

டான் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் Red Giant Movies சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார். இந்நிலையில் டான் படத்தின் OTT ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதனை பட நிறுவனம் போஸ்டரில் அறிவித்துள்ளது. படம் வெளியாகி 4 வாரங்களுக்கு பின் நெட்பிளிக்ஸில் டான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Sivakarthikeyan DON Movie OTT Rights bagged by Netflix

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

ஆஹா..DON படத்தின் OTT ஒளிபரப்பு உரிமை.. கைப்பற்றிய முன்னணி நிறுவனம்! போடு வெடிய வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan DON Movie OTT Rights bagged by Netflix

People looking for online information on Don, Netflix, OTT, Priyanka Mohan, Sivakarthikeyan, SK will find this news story useful.