#Thalapathy66: ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய்யின் 66வது படக்குழு.. குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தளபதி 66 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

Actor Vijay Thalapathy 66 Release Date Announced

நடிகர் விஜய் தமிழ் சினிமா உலகில் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர். இதன் காரணமாகவே இவரை 'இளைய தளபதி' என்று அன்போடு அழைக்கின்றனர். தீப்பறக்கும் நடனம், மாஸான லுக் என திரையில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் நடிகர் விஜய்யின் அடுத்த படம் ரிலீஸ் தேதி தற்போது வெளியிடப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

பீஸ்ட்

அண்மையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது பீஸ்ட் திரைப்படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், முதன்முறையாக பூஜா ஹெக்டேவுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருந்தார் விஜய். குறிப்பாக இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது வரையிலும் இந்த பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துவருகின்றன.

Actor Vijay Thalapathy 66 Release Date Announced

தளபதி 66

இந்நிலையில் நடிகர் விஜயின் அடுத்தப் படத்தை இயக்கிவருகிறார் வம்சி பைடிபள்ளி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். யோகி பாபு, ஷியாம் ஆகியோர் இப்படத்தில் நடித்துவந்த நிலையில் தற்போது சரத் குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகை ஜெயசுதா ஆகியோர் உள்ளிட்டோர் தளபதி 66 படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

Actor Vijay Thalapathy 66 Release Date Announced

ஸ்ரீ வெங்கேடஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரித்துவரும் இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தளபதி 66 திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில், தளபதி 66 திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay Thalapathy 66 Release Date Announced

People looking for online information on தளபதி66, விஜய், Thalapathy, Thalapathy66, Vijay will find this news story useful.