"காலேஜ் ஸ்டோரி'ன்னு நெனச்சிட்டு இருப்பீங்க.. ஆனா" டான் பற்றி உதயநிதி சொன்ன முக்கிய தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம், மே 13, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது.

Udhayanidhi stalin about don movie in trailer launch event

இப்படத்தை LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும் SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து தயாரித்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். SJ சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பல  பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் Red Giant Movies சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார்.

இரண்டு டான் இருக்காங்க..

இப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் முன் வெளியீட்டு விழா, ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின், Red Giant Movies, பேசும்போது, "ஒட்டு மொத்த டான் படக்குழுவையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். தமிழ் சினிமாவில் இப்போது இரண்டு டான்கள் உள்ளனர். ஒன்று சிவகார்த்திகேயன், மற்றொன்று  அனிருத். அவர்கள் இருவரும் மிகப்பெரிய வெற்றிகளை குவிக்கின்றனர். மேலும் அவர்களது காம்பினேஷன் நிச்சயமாக வெற்றியை தரக்கூடியது.

Udhayanidhi stalin about don movie in trailer launch event

"கல்லூரி போர்ஷன்ஸ் விட.."

ரீ-ரிக்கார்டிங் செய்யவதற்கு 10 நாட்களுக்கு முன்பே நான் படத்தை பார்த்துவிட்டேன். டாக்டரை விட இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பலர் இந்த திரைப்படத்தை கல்லூரி பின்னணி கதை என்று கருதியிருக்கலாம். ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோருடன் ஒரு அழகான பள்ளி பகுதி இந்த படத்தில் உள்ளது. எஸ்.ஜே.சூர்யா கல்லூரிப் பகுதிகளில் சிறப்பான பணியைச் செய்துள்ளார்.

Udhayanidhi stalin about don movie in trailer launch event

சமுத்திரக்கனி கடைசி 30 நிமிடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

"காலேஜ் ஸ்டோரி'ன்னு நெனச்சிட்டு இருப்பீங்க.. ஆனா" டான் பற்றி உதயநிதி சொன்ன முக்கிய தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi stalin about don movie in trailer launch event

People looking for online information on Anirudh Ravichander, Cibi Chakravarthi, Don Movie, Don Trailer, Priyanka Mohan, Sivakarthikeyan, Udhayanidhi Stalin will find this news story useful.