"அவங்க ஓவர் நைட்'ல ஃபேமஸ்.." பிரபல நடிகை பற்றி Biggboss ராஜு சொன்ன Secret.. "அது என்னவோ வாஸ்தவம் தான்.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம், மே 13, 2022 அன்று உலகம் முழுவதும்,திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது.

Biggbosss winner raju speech in don movie event

இப்படத்தை LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும் SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து தயாரித்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். SJ சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பல  பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் Red Giant Movies சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார்.

பிக்பாஸ் புகழ் ராஜு

இப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் முன் வெளியீட்டு விழா, ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், பிக்பாஸ் ஐந்தாவது சீசன் வெற்றியாளரான பிக்பாஸ் புகழ் ராஜு பேசுகையில், "இந்த படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால் SK Productions மற்றும் சிவகார்த்திகேயன் அண்ணன் இந்த விழாவிற்கு என்னை அழைத்து கவுரவித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் முன்னணி நடிகர்களை நான் நீண்ட நாட்களுக்கு முன்பே பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறேன்.

அவரு உண்மையான டான்..

ஒருமுறை சமுத்திரக்கனி சாரை ஒரு விசேஷ நிகழ்ச்சியின் போது சந்தித்தேன். ஹீரோவாக வருவதற்கு என்னை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிவகார்த்திகேயன் ஒரு உண்மையான டான், அவர் தனக்கென ஒரு தனித்துவமான சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். பிரியங்கா ஒரே இரவில் திடீரென வந்து, மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைக் கைப்பற்றிவிட்டார்.

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் போது, நாங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போவோம். சிபி தனது கல்லூரி அனுபவத்தை வைத்து இந்தப்படத்தை இயக்கியுள்ளார். படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி" என ராஜு தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

"அவங்க ஓவர் நைட்'ல ஃபேமஸ்.." பிரபல நடிகை பற்றி BIGGBOSS ராஜு சொன்ன SECRET.. "அது என்னவோ வாஸ்தவம் தான்.." வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Biggbosss winner raju speech in don movie event

People looking for online information on BiggBoss Raju, Cibi Chakravarthi, Don, Don Trailer, Priyanka Mohan, Sivakarthikeyan will find this news story useful.