Dating பண்றது சாதாரண விஷயம் இல்ல, அதுவும் அந்த பசங்க Danger.. நடிகை பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள ஸ்டேட்டஸ் குறித்து தான் தற்போது பலரும் தற்போது வைரலாக பேசிவருகின்றனர்.

Dating a Mature Guy is stressful says Priya Bhavani Shankar

பிரியா பவானி ஷங்கர்

தமிழகத்தில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை துவங்கிய பிரியா பவானி ஷங்கர் அதன் பிறகு சின்னத் திரையில் பிரபல சீரியலில் நடித்துவந்தார். பின்னர் சினிமா உலகில் கால்பதித்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம்வருகிறார். 2017 ஆம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் படத்தில் நாயகியாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றார்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள், கருத்துக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டேட்டஸ் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டேட்டிங்

வளர்ந்துவரும் நாகரீக உலகில் டேட்டிங் என்பது சாதாரண சொல்லாக மாறிவிட்டது. இது குறித்து பல்வேறு மக்களும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் டேட்டிங் பற்றித்தான் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். அதாவது Mature ஆன ஆண்களுடன் டேட்டிங் செல்லும்போது, ஏதாவது தவறு ஏற்பட்டால் உடனடியாக அதுபோன்ற ஆண்கள் மன்னிப்பு கேட்டுவிடுவார்கள் என்றும் அப்படி செய்துவிட்டால் தனது கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது என கேள்வியெழுப்பியுள்ளார் பிரியா பவானி ஷங்கர்.

அந்த ஸ்டேட்டஸில்," Mature ஆன ஆணுடன் டேட்டிங் செய்வது மிகுந்த அழுத்தத்தை கொடுக்கும். அவர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுவார்கள். நான் எப்படித்தான் என்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவது?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

டேட்டிங் குறித்து பிரியா பவானி ஷங்கர் போட்ட இந்த பதிவு தற்போது, சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

தொடர்புடைய இணைப்புகள்

Dating a Mature Guy is stressful says Priya Bhavani Shankar

People looking for online information on இன்ஸ்டாகிராம், பிரியாபவானிஷங்கர், ஸ்டேட்டஸ், Dating, Instagram, PriyaBhavanishangar will find this news story useful.