தனது குருநாதர் அட்லிக்கு நன்றி சொன்ன DON பட இயக்குனர்.. இதான் காரணமா? சூப்பர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும்,திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது.

Don Director Cibi Chakravarthy about His Guru Atlee Kumar

இப்படத்தை LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும்  SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். SJ சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பல  பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் Red Giant Movies சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார். இப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் முன் வெளியீட்டு 

விழா ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் நடைபெற்றது.

Don Director Cibi Chakravarthy about His Guru Atlee Kumar

இவ்விழாவினில் நடிகர் பால சரவணன் பேசியது...இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிபி சக்கரவர்த்திக்கு நன்றி. நாங்கள் 4-5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பைலட் திரைப்படத்தில் ஒன்றாக வேலை செய்தோம், அப்போதிலிருந்து நாங்கள் நண்பர்களாய் இருந்து வருகிறோம். நான் அயலான் படத்தில் பணிபுரிந்தபோது, படத்தில் எனக்கு மிகக் குறைவான காட்சிகளே இருந்தன.

அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் அண்ணன் வேற ப்ராஜெக்ட் இருக்கு, அதில் என் ரோல் அதிகமா இருக்கும்னு சொன்னார். இந்தப் படத்தில் என்னையும் ஒரு அங்கமாக ஆக்கியதன் மூலம் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். படபிடிப்பு நேரத்தில் அவர் காட்டிய அன்பு விலைமதிப்பற்றது, இப்போதும் கூட அவர் காட்டும் அன்பு தனித்துவமானது. நான் எஸ்.ஜே.சூர்யா சாரின் தீவிர ரசிகன். படப்பிடிப்பின் போது, செட்டில் அவரது நடிப்பைப் பார்த்து எங்களது வசனங்களை மறந்துவிடுவோம்.

சமுத்திரக்கனி சார் ஒரு சகோதரனைப் போன்றவர், தவறு செய்யும் போது உரிமை எடுத்து  நம்மை கண்டிப்பார், நல்லது செய்தால் பாராட்டுவார். ஆரம்ப நாட்களில் பிரியங்கா சாதுவாக தெரிந்தார், ஆனால் பின்னர், அவரது நகைச்சுவையால் எங்களை கலாய்க்க  ஆரம்பித்துவிட்டார். டான் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு அருமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.

Don Director Cibi Chakravarthy about His Guru Atlee Kumar

நடிகர் RJ  விஜய் கூறியதாவது... எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி. நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களுடன் இருக்கும் உணர்வை போன்ற அனுபவத்தை எங்களுக்கு வழங்கினார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிபி அண்ணனுக்கு நன்றி. டான் படத்தில் பணிபுரிவது இரண்டு வகுப்புகளில் கலந்துகொள்வதைப் போன்றது, ஒன்று பிராக்டிகல் மற்றொன்று தியரி.  ஒன்று சிவா அண்ணா, சமுத்திரக்கனி சார், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிற கலைஞர்களுடன் பணிபுரிந்தது. பின்னர் கேமரா ஆஃப் ஆனதும், அது ஒரு தியரி வகுப்பாக இருக்கும், ஏனெனில் அனைவரும் தங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர் நன்றி.

பிக்பாஸ் புகழ் நடிகர் ஷாரிக் கூறியதாவது... இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று முதலில் நான் தான் சிபியிடம் கேட்டேன். உண்மையில்,  படத்தில் 2 நிமிடம் தான் நான் வருவேன், அடுத்த படத்தில் எனக்கு அதிக ஸ்கோப் கொடுப்பார் என நம்புகிறேன். சிவகார்த்திகேயன் அண்ணா கலக்கப்போவது யாரு மூலம் தனது பயணத்தை தொடங்கிய காலத்திலிருந்தே அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நிஜ வாழ்க்கையில் எனக்கு கிடைக்காத கல்லூரி வாழ்க்கையை, திரைப்படத்தில் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எஸ்.ஜே.சூர்யா சார் மற்றும் சமுத்திரக்கனி சாருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Don Director Cibi Chakravarthy about His Guru Atlee Kumar

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி பேசியது...இந்த தருணம் நான் பல வருடங்களாக காத்திருந்த ஒன்று. எனது கனவுகளை நனவாக்க பெரும் உறுதுணையாக இருந்த என் பெற்றோருக்கு நன்றி கூறிகொள்கிறேன். இவ்வளவு பெரிய நட்சத்திர நடிகர்களைக் கையாளும் அளவிற்கு என்னை தகுதி உடையவனாக மாற்றிய அட்லீக்கு நன்றி.

அவர் எனது வழிகாட்டியாக இருந்து, எனக்கு பல அனுபவங்களை கற்று தந்தார். சிவகார்த்திகேயன் சாரின் ஒரு போன் கால், என் வாழ்க்கையை மாற்றியது. SK வின் வெற்றி நான் உட்பட பலருக்கு உத்வேகம் அளித்துள்ளது. அவரது திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்ற போதிலும், அவர் எப்போதும் பணிவுடன் இருப்பார். படம் தொடங்கிய காலத்திலிருந்தே, கொரோனா பிரச்சனைகள் உட்பட பல சவால்கள் இருந்தன.

ஆனால் அந்த நேரத்திலும், அவர் படம் சிறப்பாக உருவாவதற்கான அறிவுரைகளை கொடுத்துக்கொண்டே இருப்பார். டான் படத்தில், SK சார்,  நிஜ மற்றும் ரீல்-சக்கரவர்த்தி ஆகிய இருவருக்கும் உயிர் கொடுத்துள்ளார். அனிருத் சார் ஒரு பாசிட்டிவிட்டி நிறைந்த மனிதர், அதை எங்கள் முதல் சந்திப்பிலேயே என்னால் உணர முடிந்தது. எஸ்.ஜே.சூர்யாவும், சமுத்திரக்கனியும் இந்தப் படத்தின் தூண்கள். பிரியங்கா அருள் மோகன் ஒரு நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள கலைஞர். பெரும் ஆதரவை வழங்கிய ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் நன்றி. டான்  திரைப்படம் பார்வையாளர்கள் அனைவருக்கும் வேடிக்கையான மற்றும் அழகான பொழுதுபோக்கு நிறைந்த படமாக இருக்கும்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

தனது குருநாதர் அட்லிக்கு நன்றி சொன்ன DON பட இயக்குனர்.. இதான் காரணமா? சூப்பர் தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Don Director Cibi Chakravarthy about His Guru Atlee Kumar

People looking for online information on Atlee, Cibi, Don, Mersal, Priyanka Mohan, Sivakarthikeyan, SK, Vijay will find this news story useful.