டாக்டர் படம் 100 கோடி வசூல்.. அப்போ டான் பட வசூல்? மனம் திறந்த தயாரிப்பாளர் தரப்பு! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும்,திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது.

Lyca Productions about Don Movie Box Office Collections

இப்படத்தை LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும்  SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். SJ சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பல  பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

Lyca Productions about Don Movie Box Office Collections

தமிழ்நாடு முழுவதும் Red Giant Movies சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார். இப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் முன் வெளியீட்டு 

விழா ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலை இயக்குனர் உதய்குமார் பேசியது...

LYCA PRODUCTIONS, சிவகார்த்திகேயன் சார், கலை சார், இயக்குனர் சிபி ஆகியோர்தான் இந்த படத்தின் கலைப் பணிகள் மிக அழகாக அமைந்ததற்கான காரணம். இந்தப் படத்தை அனைவரும் முழுமையாக ரசிப்பார்கள். அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் KM பாஸ்கரன் பேசியது...

டான் திரைப்படம் மிக அட்டகாசமான படம், மற்றும் எனக்கு நெருக்கமான ஒரு படம். சிவா சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஹீரோ’ படத்தின் பேட்ச் அப் பணியின் போது, இருவரும் விரைவில் இணைந்து மீண்டும் பணியாற்றுவோம் என்று கூறிய அவர், இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்துள்ளார். இயக்குனர் சிபியின் பார்வையும், அர்ப்பணிப்பும் அசாதாரணமானது.

அவர் கதையை விவரித்த விதமும், காட்சிப்படுத்திய விதமும் மிக அருமை. எஸ்.ஜே.சூர்யா சாரை படப்பிடிப்பு தளத்தில் ஒளிப்பதிவு செய்தது மிகப்பெரிய அனுபவம். இந்தப் படத்தில் 5 இயக்குனர்களை படம் பிடித்தது, இந்தப் படத்தின் பெரிய சிறப்பம்சமாகும். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி சார் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தை திறம்பட செயல்படுத்துவதில் கலை சார் ஒரு தூணாக இருந்துள்ளார்.

Lyca Productions about Don Movie Box Office Collections

இவ்விழாவினில் LYCA PRODUCTIONS  சார்பில் தமிழ் குமரன் கூறியதாவது...

எங்களுக்கு ஆதரவாக இருந்ததற்கு சிவகார்த்திகேயனுக்கும், கலை அரசுக்கும் நன்றி. எனது திறமையை வெளிக்கொண்டு வர  இடம் கொடுத்த சுபாஷ் அண்ணனுக்கு நன்றி. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘டாக்டர்’ பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்ததது, ‘டான்’ படமும் அந்த சாதனையை நிகழ்த்தும். அனிருத் அனைவரையும் கவரும் படியான பாடல்களை வழங்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்காக வெற்றிகரமான நடிகை பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா சார் மற்றும் சமுத்திரக்கனி சார் ஆகியோருக்கு நன்றி. இயக்குனர் சிபி ஒரு கடின உழைப்பாளி, மேலும் அவர் இந்த படம் சிறப்பாக வருவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார். இந்த படத்திற்கு முழு ஆதரவையும் வழங்கிய உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.

Lyca Productions about Don Movie Box Office Collections

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

டாக்டர் படம் 100 கோடி வசூல்.. அப்போ டான் பட வசூல்? மனம் திறந்த தயாரிப்பாளர் தரப்பு! முழு தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Lyca Productions about Don Movie Box Office Collections

People looking for online information on Doctor, Don, Lyca, Siva Karthikeyan, SK will find this news story useful.