VIRAL PIC… ”நீயே என் சூரிய சந்திரன்”… முதல் முறையாக மகனை ரசிகர்களுக்கு காட்டிய காஜல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவர் இப்போது குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Actress kajal agarwal latest viral pic with his son

Also Read | ”KRK ஷூட்டுல Best day… விஜய் சேதுபதி மேஜிக் பண்ணிட்டார்”… விக்னேஷ் சிவன் பகிர்ந்த viral வீடியோ!

ரசிகர்களின் வாழ்த்து…

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்த காஜல் அகர்வால், சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் திருமணம் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது. அதையடுத்து காஜல் அகர்வால் தன் கணவருடன் ஹனிமூனுக்கு சென்ற புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களிடம் வாழ்த்துகளைப் பெற்றார். அதையடுத்து சில மாதங்களுக்கு முன் காஜல் அகர்வால்  தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதையடுத்து சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல்  என்று பெயர் வைத்துள்ளனர்.

Actress kajal agarwal latest viral pic with his son

மகனை உச்சிமுகர்ந்த காஜல்…

இதுவரையில் மகனின் புகைப்படத்தை பகிராமல் இருந்த காஜல் இப்போது முதல் முறையாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தோடு “நீ எவ்வளவு விலைமதிப்பற்றவன். நான் உன்னை என் கைகளில் பிடித்தேன். உன் சிறிய கையை என் கைக்குள் பிடித்து, உன் சூடான சுவாசத்தை உணர்ந்தேன். நீ என் முதல் குழந்தை. என் முதல் மகன். என் முதல் எல்லாம், உண்மையில். வரவிருக்கும் ஆண்டுகளில், நான் உனக்குக் என்னால் கற்பிக்க முடிந்த அனைத்தையும் கற்பிப்பேன். ஆனால் நீ ஏற்கனவே எனக்கு எல்லையற்றவைகளைக் கற்றுத் தந்திருக்கிறாய். தாயாக இருப்பது என்ன என்பதை நீ எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளாய். தன்னலமற்றவளாக இருக்கக் கற்றுக் கொடுத்தாய். தூய அன்பை எனக்குக் கற்றுக் கொடுத்தாய். மேலும் நான் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. இவை அனைத்தையும் நான் முதலில் அனுபவிக்கும் காரணமாக இருந்ததற்கு நன்றி. இந்த அனுபவத்தை எனக்குக் கொடுத்தவர்கள் வேறு யாரும் இல்லை. கடவுள் உன்னை தேர்ந்தெடுத்தார், என் சிறிய இளவரசன்.” என மகனை உச்சிமுகர்ந்து நெகிழ்ந்துள்ளார்.

Actress kajal agarwal latest viral pic with his son

நீயே என் சூரிய சந்திரன்…

மேலும் “நீ வலுவாகவும் இனிமையாகவும் வளர நான் பிரார்த்தனை செய்கிறேன். உனது பிரகாசமான மற்றும் அழகான ஆளுமையை இந்த உலகம் ஒருபோதும் மங்கிவிட செய்யக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன். நீ தைரியமாகவும் கனிவாகவும் தாராளமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நான் ஏற்கனவே உன்னிடம் இவற்றில் பலவற்றைப் பார்க்கிறேன். உன்னை என்னுடையவன் என்று அழைப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது! நீ என் சூரியன், என் சந்திரன், என் நட்சத்திரங்கள் அனைத்தும். அதை நீ என்றும் மறந்து விடாதே.” உருக்கமாக அந்த பதிவில் கூறியுள்ளார்.

Actress kajal agarwal latest viral pic with his son

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

VIRAL PIC… ”நீயே என் சூரிய சந்திரன்”… முதல் முறையாக மகனை ரசிகர்களுக்கு காட்டிய காஜல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress kajal agarwal latest viral pic with his son

People looking for online information on Kajal Agarwal, Kajal agarwal latest picture with her son will find this news story useful.