நம்ம அரசியலுக்கு போயிருவோமா? சிவகார்த்திகேயனின் ரசிக்க வைக்கும் DON படத்தின் ஜாலி டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

SivaKarthikeyan Priyanka Mohan Don Movie Trailer Released

Also Read | A.R. ரஹ்மான் இசையில்.. "வெந்து தணிந்தது காடு" SINGLE.. சிம்பு குரலில் நெஞ்சை உருக வைக்கும் மெலடி பாடல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன், பிக்பாஸ் ராஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி  இயக்கியுள்ளார்.

SivaKarthikeyan Priyanka Mohan Don Movie Trailer Released

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன.  சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது.

SivaKarthikeyan Priyanka Mohan Don Movie Trailer Released

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த படத்தின் விளம்பரத்துக்காக பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப் பட்டு வருகின்றன. இந்த படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகியுள்ள ஜலபுல ஜங்கு மற்றும் பே (bae), Private Party ஆகிய பாடல்கள் சமூகவலைதளங்களில் ஹிட்டடித்துள்ளன.

SivaKarthikeyan Priyanka Mohan Don Movie Trailer Released

ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. மேலும் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியும் தற்போது நடந்து வருகிறது.  டிரெய்லரில் சிவகார்த்திகேயன் கல்லூரி, பள்ளி மாணவராகவும், எஸ்.ஜே சூர்யா முதல்வராகவும் தோன்றுகின்றனர். பிரியங்கா மோகன், SK-வின் பள்ளி தோழியாகவும், கல்லூரிக் காதலியாகவும் தோன்றுகிறார். மலையாள பெண்ணாக சிவாங்கி நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சூரி, ராதாரவி மிக முக்கிய ரோலில் தோன்றுகின்றனர்.

SivaKarthikeyan Priyanka Mohan Don Movie Trailer Released

காமெடி, காதல், மோதல், செண்டிமெண்ட் என டிரெய்லர் அமைந்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

நம்ம அரசியலுக்கு போயிருவோமா? சிவகார்த்திகேயனின் ரசிக்க வைக்கும் DON படத்தின் ஜாலி டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Priyanka Mohan Don Movie Trailer Released

People looking for online information on Don Movie, Don Movie Trailer, Priyanka Mohan, Sivakarthikeyan will find this news story useful.