"ரிலீஸ்க்கு முன்பே நல்ல லாபம்.." டான் படம் குறித்து தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும்,திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இப்படத்தை LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும்  SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து தயாரித்துள்ளனர்.

SK Productions Kalai about Don Movie Profit before Release

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். SJ சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பல  பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் Red Giant Movies சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார். இப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் முன் வெளியீட்டு விழா ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் நடைபெற்றது.

SK Productions Kalai about Don Movie Profit before Release

இவ்விழாவில் படதொகுப்பாளர் நாகூரான் பேசியது...

இது எனது நண்பன் சிபி உடைய படம். 10 ஆண்டுகளுக்கு முன், சிபியின் முதல் படத்திற்கு நான் எடிட்டராக பணியாற்ற வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார், அந்த  வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார். அவருக்கு நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

நடன இயக்குனர் ஷோபி பேசியது...

சிபி ஆரம்பத்தில் பாடலைப் பற்றி என்னிடம் கூறியபோது, ஜலபுலஜங்கு பாடல் ஒரு பெரிய ஹிட் பாடலாக அமைய வேண்டும் என்று அவர் கூறினார். நான் சரி என்ற முடிவில் இருந்தேன், ஆனால் முதலில் பாடலைக் கேட்க வேண்டும் என்று விரும்பினேன்.  அனிருத் ஒரு பிரமாதமான பாடலை அமைத்திருந்தார், பின்னர், அதனை சரியாக உருவாக்குவது எனது வேலையாக இருந்தது.

SK Productions Kalai about Don Movie Profit before Release

பாடலின் படப்பிடிப்பு நேரம் வந்தபோது, சிவகார்த்திகேயன் உடல்நலக்குறைவில் இருந்தபோதிலும் பாடலில் நம்பமுடியாத முயற்சிகளை மேற்கொண்டார். இந்த பாடலை படமாக்கும்போது நிறைய சவால்கள் இருந்தன, இருந்தாலும் திரையரங்குகளில் பார்வையாளர்களால் கொண்டாடப்படும் ஒரு மகத்தான வேலையை சிவகார்த்திகேயன் செய்துள்ளார். பாடலை கண்டிப்பாக ரசிப்பீர்கள்

நடன இயக்குனர் பாபி கூறியதாவது...

இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிபிக்கு நன்றி. நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன், படத்தின் பாடலுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. எஸ்.ஜே.சூர்யா சார், சமுத்திரக்கனி சார் ஆகியோருடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எஸ்.கே.வின் அடுத்த படத்தில் நடனம் அமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

SK Productions Kalai about Don Movie Profit before Release

நடிகை மற்றும் பாடகி சிவாங்கி பேசியது...

இந்தப் படத்தில் நான் நடிக்க முதல் காரணமாக இருந்த சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி. நான் எப்போதும் சிபி சாரை பல கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறேன், ஆனால் அவர் என்னிடம் அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்தார். கலை சார் உடன் பணிபுரிந்தது அருமையான அனுபவமாக இருந்தது, படப்பிடிப்பு முழுவதும் அவர் மிகவும் கூலாக இருந்தார். எஸ்.ஜே.சூர்யா சார், இவ்வளவு பெரிய கலைஞன், அவர் இவ்வளவு பணிவான மனிதராக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

அவர் எனக்கு நிறைய கதைகளை கூறினார். சமுத்திரக்கனி சார் அவரது  கேரக்டரை முழுமையாக உள்வாங்கி படப்பிடிப்பிற்கு வந்தார். எஸ்.கே.அண்ணா அவ்வளவு இனிமையான மனிதர். அவ்வளவு பெரிய நடிகரான போதிலும், அவர் இன்னும் பணிவாகவும், செட்டில் அனைவரையும் சமமாகவும் நடத்துகிறார். பிரியங்கா படபிடிப்பு தளத்தில் மிகவும் அழகாக இருந்தார், படப்பிடிப்பில் அவர் என்னிடம் நன்றாக பழகினார்.  நான் சில தவறுகளை செய்த போது, முழு தொழில்நுட்பக் குழுவும் எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தது. அனிருத் சார் இசையமைக்கும் இந்த படத்தில் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

கலையரசு, இணை தயாரிப்பாளர், SIVAKARTHIKEYAN PRODUCTIONS பேசியது...

"இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பே, சிவகார்த்திகேயன் என்னிடம், நாம் LYCA PRODUCTIONS உடன் இணைந்து பணியாற்ற போகிறோம், அவர்களுக்கு நல்ல லாபத்தை தர வேண்டும் என்று கூறினார். டான் மூலம் அவர்களுக்கு படம் வெளியாகும் முன்பே  லாபம் கிடைத்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் படத்தின் வெளியீட்டை சிறப்பாக மாற்றிய  உதயநிதி ஸ்டாலின் சார் மற்றும் அவரது Red Giant குழுவினருக்கு நன்றி. டான் அனைவருக்குமான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனை டாக்டராகப் பார்த்தீர்கள், டான் திரைப்படத்தில் பி.இ., பேச்சுலர் ஆஃப் எண்டர்டெயின்மெண்ட் - ஆக பார்ப்பீர்கள்" அனைவருக்கும் நன்றி.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

"ரிலீஸ்க்கு முன்பே நல்ல லாபம்.." டான் படம் குறித்து தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SK Productions Kalai about Don Movie Profit before Release

People looking for online information on Don, Don Movie, Kalai, Priyanka Mohan, Sivakarthikeyan, SK will find this news story useful.