BIG BREAKING: சிம்புவின் ’மாநாடு’ படத்தின் ’மகா வில்லன்’ இவரா?
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 06, 2020 01:55 PM
பல தடைகளுக்கு பிறகு சிம்பு – வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் மாநாடு திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. முதற்கட்ட வேலையாக படத்தின் கம்போசிங் வேலையை இயக்குநர் வெங்கட்பிரபு – யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து தொடங்கி உள்ளார்.

வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். பொங்கலை முன்னிட்டு மாநாடு படத்தில் நடிக்கும் நடிகர்கள், பணியாற்றும் கலைஞர்கள், ஷூட்டிங் விவரங்களை அறிவிக்கப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முன்னதாகவே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ’தனி ஒருவன்’ படத்தில் இவர் நடித்த வில்லன் கதாப்பாத்திரம் வெகுவாக பேசப்பட்டது.
Tags : Simbu, Arvind Swami