சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கிளம்பிய நடிகர் சிம்பு - வைரலாகும் ஃபோட்டோஸ்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 10, 2019 11:02 AM
நடிகர் சிம்பு சுந்தர்.சி இயக்கத்தில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. மேலும் ஓவியா முதன்மை வேடத்தில் நடித்த 90எம்எல் படத்துக்கு அவர் இசையமைத்திருந்தார்.

இதனையடுத்து இவரது நடிப்பில் மாநாடு திரைப்படம் மிக விரைவில் தொடங்கப்படவிருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இந்நிலையில் நடிகர் சிம்பு ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
தற்போது சிம்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கிளம்பியுள்ளார். அப்போது நடத்தப்பட்ட பூஜையில் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் உடனிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சிம்பு ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
Tags : Simbu, Str, Sabarimala Ayyappan Temple