மாநாடு Countdown Starts – சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு, சுந்தர் சி-யின் இயக்கத்தில் நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படத்துக்கு பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருந்தார்.

Simbu STR, Venkat Prabhu's Maanaadu update will be out on Pongal says Suresh Kamatchi

இந்த படத்தை V ஹவுஸ் புரடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். மாநாடு படம் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு சில காரணங்களால் அந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும்  படத்தை தொடங்கும் முடிவுக்கு படக்குழுவினர் வந்த பிறகு ரசிகர்கள் மாநாடு அப்டேட்டுக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பொங்கலுக்கு, அப்படத்தில் நடிப்பவர்கள், பணியாற்றுபவர்கள் மற்றும் ஷூட்டிங் தேதி பற்றிய விவரங்களை தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளார்.

Entertainment sub editor