தடைகளை தகர்த்து விரைவில் தொடங்கும் STRன் ’மாநாடு’ ஷூட் - விவரம் உள்ளே
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 15, 2019 06:02 PM
வெங்கட் பிரபு சிம்புவை ஹீரோவாக வைத்து 'மாநாடு' படத்தை இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் அந்த படம் நடைபெற தாமதமானது.

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ‘மாநாடு’ என்ற தலைப்பில் அரசியல் கதைக்களம் சார்ந்த திரைப்படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து காலதாமதமானதால் ‘மாநாடு’ கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது அனைத்து தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டு வெங்கட் பிரபு ’மாநாடு’ கதை விவாதத்தில் ஈடுபட தொடங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஜனவரி 3வது வாரம் ’மாநாடு’ படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது.
Tags : Simbu, Venkat Prabhu, Maanaadu, Kalyani Priyadarshan