பிரபல இயக்குநரின் பிரம்மாண்டமான Project-ஐ அறிவித்த 'மாநாடு' தயாரிப்பாளர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 27, 2019 04:15 PM
இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜா தனது யதார்த்தமான கிராமத்து பின்புலம் கொண்ட படங்களின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த இயக்குநராக அறியப்படுகிறார். இவரது படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் பேரன்கள் அதீத பாசம் கொண்ட தாத்தவாக தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
இந்நிலையில் பாராதிராஜாவின் கனவுப் படைப்பான 'குற்றப் பரம்பரை' படம் தற்போது வலை தொடராக (Web Series) வெளிவரவிருக்கிறது. இதனை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கவிருக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'மாநாடு' படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : Maanaadu, Suresh Kamatchi