'டின்னர் டைம் வித் சாமி' - சிம்புவின் லேட்டஸ்ட் ஃபோட்டோவை பகிர்ந்த பிக்பாஸ் ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு 'மாநாடு' படத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பாக தயாரிப்பார் என்றும் கூறப்பட்டது.

Bigg Boss 2 fame Mahat Shares Photo with Actor Simbu

இந்நிலையில் பல்வேறு காரணங்களால் இந்த படம் துவங்க தாமதமானது. இதனையடுத்து இந்த படத்தில் இருந்து நடிகர் சிம்பு நீக்கப்படுவதாகவும் சில மாற்றங்களுடன் இந்த படம் விரைவில் துவங்கும் என்றும் அறிவிப்பு வெளியானது. இந்த நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு 'எஸ்டிஆரின் 'மாநாடு' படப்பிடிப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்தார். இது சிம்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகரும் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளருமான மஹத் தனது ட்விட்டர் பக்கதக்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், டின்னர் டைம் வித் சாமி என்று குறிப்பிட்டுள்ளார்.  அந்த ஃபோட்டோவில் சபரி மாலை போட்டிருக்கும் சிம்பு கருப்பு உடையில் இருக்கிறார்.