BREAKING: சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ படத்தின் புதிய ஆபரேஷன் - எப்ப டிஸ்சார்ஜ் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 06, 2020 01:02 PM
நடிகர் சிவகார்த்திகேயன் பி.எஸ். மித்ரனின் இயக்கத்தில் நடித்த ’ஹீரோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை முடித்த கையோடு தன் அடுத்த படத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன், கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ’டாக்டர்’ என்ற படத்தி நடித்து வருகிறார்.
கேஜேஆர் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். ’உன்னாலே உன்னாலே’, ’துப்பறிவாளன்’ போன்ற படங்களில் நடித்த வினய் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இப்படத்துக்கு பின்னணி இசையமைக்கிறார்.
டிசம்பரில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கி உள்ளது.டாக்டர் படத்தின் முழுவேலைகளும் முடிவடைந்து வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.