BREAKING: சிம்புவின் ’மாநாடு’ ஷூட் எப்போனு தெரியுமா? - அதிரடி அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 05, 2020 07:05 PM
சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் மாநாடு திரைப்படம் துவங்க உள்ளதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது. ஆனால் பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திரைப்படம் தொடங்குவதில் பல தடைகள் ஏற்பட்டன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் டிவிட்டரில் பதிவிட்ட மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தின் வேலைகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும், சிம்புவுடன் நடிக்கும் நடிகர்கள், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஷூட்டிங் தேதிகள் குறித்த விவரங்கள் வரும் பொங்கலன்று வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் கம்போசிங் இன்று தொடங்கி உள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. படத்தின் ஷூட் வரும் பிப்ரவரி 5ம் தேதி தொடங்க உள்ளது.
Tags : Maanaadu, Simbu, Yuvan Shankar Raja