சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி கூட்டணியில் செல்வராகவனின் இன்னொரு ’புதுப்பேட்டை’
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 24, 2019 02:22 PM
2004ம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான ‘7ஜி ரெயின்போ காலனி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரவி கிருஷ்ணா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்த அவர் இறுதியாக தியாகராஜன் குமார ராஜாவின் முதல் படமான ’ஆரண்ய காண்ட’த்தில் சப்பை எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

பின்னர் நடிப்பில் இருந்து ப்ரேக் எடுத்துக்கொண்ட அவர் அடுத்த படத்துக்காக கதை கேட்டு வருகிறார். பிஹைண்ட்வுட்சுக்காக இவர் அளித்த பிரத்தியேக பேட்டியில் செல்வராகவனுடன் 7ஜி ரெயின்போ காலனியில் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
மேலும், செல்வராகவனுடன் இணைந்து உருவாக்க இருந்த மற்றொரு திரைப்படம் குறித்துக் தெரிவித்தார். 7ஜி படப்பணியில் இருந்தபோது செல்வராகவன் உருவாக்கிய அந்த ஸ்க்ரிப்டுக்கு புதுப்பேட்டை என்று தற்காலிகமாக பெயர் சூட்டியுள்ளனர். சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, ரவிகிருஷ்ணா, ஜெனீலியா என்று நடிகர் பட்டாளத்துடன் உருவாக இருந்த அந்த திரைப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இந்த கதை இப்போது எடுத்தால் கூட சிறப்பாக இருக்கும் என்கிறார் ரவி கிருஷ்ணா.
சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி கூட்டணியில் செல்வராகவனின் இன்னொரு ’புதுப்பேட்டை’ வீடியோ