www.garudabazaar.com

1000 கோடி வசூலை நெருங்கும் 'பதான்'.. இந்தி சினிமா வரலாற்றில் படைத்த மெகா சாதனை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தின் 21 நாள் வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

Shahrukh Khan Pathaan 21 days Box Office Collection

Images are subject to © copyright to their respective owners.

Also Read | இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் 'Surya 42'.. ஷூட்டிங் குறித்த EXCLUSIVE அப்டேட்!

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகி உள்ளது. 5 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த படமாக பதான் அமைந்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள  ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் வில்லனாக நடித்துள்ளார்.

Shahrukh Khan Pathaan 21 days Box Office Collection

Images are subject to © copyright to their respective owners.

பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமான பதான் படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆகி உள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸின் Spy Universe படங்களில் நான்காவது படமாக பதான் படம் வெளியாகி உள்ளது. முன்னதாக சல்மான் கான்  ஏக் தா டைகர் (2012),  டைகர் ஜிந்தா ஹே (2017) ,  ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வார் (2019) திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படம் உருவாகி உள்ளது.

Shahrukh Khan Pathaan 21 days Box Office Collection

Images are subject to © copyright to their respective owners.

பதான் படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்தது.‌  முதல் இரண்டு நாளில் 219.6 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இந்தி சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பதான் படம் ஏற்கனவே சாதனை படைத்தது. ஐந்து நாளில் பதான் படம் உலகம் முழுவதும் 543 கோடி ரூபாயை வசூலித்தது. இந்நிலையில் பதான் திரைப்படம் 21 நாட்களில் 963 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தி சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படமாக பதான் படம் சாதனை படைத்துள்ளது.

Shahrukh Khan Pathaan 21 days Box Office Collection

Images are subject to © copyright to their respective owners.

இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் இந்திய ரூபாய் மதிப்பில் 363 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக வடிவமைப்பு போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது.

Also Read | அடிபொலி.!! 'பிரேமம்' அனுபமாவின் தமிழ் பாட்டு.. டக்குனு VTK ஹீரோயின் போட்ட கமெண்ட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Shahrukh Khan Pathaan 21 days Box Office Collection

People looking for online information on Pathaan, Pathaan Box Office Collection, Shah Rukh Khan will find this news story useful.