www.garudabazaar.com
iTechUS

Pathaan : "படங்களின் தோல்வினால.. சமையல் வரை கத்துக்க ஆர்மபிச்சேன்".. ஷாருக் உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாருக் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த பாலிவுட் திரைப்படம் 'பதான்'.

Shah Rukh Khan about his cinema life before pathaan movie

                  Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவை களமிறக்கும் பிரபல டிவி சேனல்.. கலந்துகொள்ளும் 10 ரியல் ஜோடிகள்..!

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி இருந்தார். மேலும் ஷாருக் கானுடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

பதான் திரைப்படம், கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த நிலையில், பெரிய அளவில் பாலிவுட்டில் வெற்றியையும் பெற்றிருந்தது.  அது மட்டுமில்லாமல், வசூல் ரீதியாகவும், பெரிய வெற்றி பெற்றிருந்த பதான் திரைப்படம், பாலிவுட் சினிமாவில் ஒரு மைல்கல்லாகவும் மாறி உள்ளது.

அதே போல, சமீபத்திய கால பாலிவுட் திரைப்படங்களில் பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் ஆகவும் பதான் மாறி உள்ளது. இந்த வெற்றியை இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், பதான் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஷாருக் கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது ஷாருக் கான் பேசியுள்ள விஷயம் அதிக வைரலாகி வருகிறது.

இதில் பேசிய ஷாருக் கான், "ரசிகர்கள் இந்த படத்திற்கு கொடுத்துள்ள ஆதரவிற்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். சினிமாவில் மீண்டும் எனக்கு வாழ்க்கையை கொடுத்ததற்கு நன்றி. கடந்த ஒன்றிரண்டு வருடங்களாக நான் படத்திலும் நடிக்கவில்லை. குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டேன். ஒரு சில படங்கள் தோல்வி அடைந்ததால் நான் வேறு தொழிலை பற்றி கூட யோசிக்க ஆரம்பித்தேன். ரெஸ்டாரண்ட் தொடங்கும் எண்ணத்துடன் கூட சமையலை கூட நான் கற்றுக் கொண்டேன்" என தெரிவித்தார்.

Also Read | “மைக்கேல் மதன காம ராஜன் மாதிரி 4 கேரக்டர் நடிக்க ஆசை”.. ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படம் இதுதான்..!

தொடர்புடைய இணைப்புகள்

Shah Rukh Khan about his cinema life before pathaan movie

People looking for online information on Pathaan, Shah Rukh Khan will find this news story useful.