www.garudabazaar.com

அடிபொலி.!! 'பிரேமம்' அனுபமாவின் தமிழ் பாட்டு.. டக்குனு VTK ஹீரோயின் போட்ட கமெண்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் வெந்து தணிந்தது காடு.

Siddhi Idnani comment about Anupama Parameshwaran Mallipoo Video

Images are subject to © copyright to their respective owners.

Also Read | இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் 'Surya 42'.. ஷூட்டிங் குறித்த EXCLUSIVE அப்டேட்!  

வெந்து தணிந்தது காடு படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்தார். தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் (சிம்பு) வாழ்க்கை சம்பவங்களே "வெந்து தணிந்தது காடு" படமாகும். இந்த படத்தில் பாவை எனும் கதாபாத்திரத்தில் சித்தி இத்னானி நடித்திருந்தார்.

Siddhi Idnani comment about Anupama Parameshwaran Mallipoo Video

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பலருடைய கவனத்தை ஈர்த்த சித்தி இத்னானி, அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக புதிய படத்திலும், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 100 கோடி வானவில் படத்திலும் சித்தி இத்னானி நடித்துள்ளார்.

Siddhi Idnani comment about Anupama Parameshwaran Mallipoo Video

Images are subject to © copyright to their respective owners.

குஜராத்தி, தெலுங்கு மொழிகளிலும் சித்தி இத்னானி நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடலை பாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் நடிகை சித்தி இத்னானி "Nice Songggggg 😜🥰🖤" என கமெண்ட் செய்துள்ளார்.

Siddhi Idnani comment about Anupama Parameshwaran Mallipoo Video

Images are subject to © copyright to their respective owners.

வெந்து தணிந்தது காடு படத்தில்  பாடகி மதுஶ்ரீ பட்டாச்சார்யா இந்த பாடலை பாடியுள்ளார். மேலும்  பிருந்தா மாஸ்டர் இந்த பாடலுக்கு படத்தில் நடனம் அமைத்துள்ளார்.  இந்த பாடலின் முழு வீடியோவும் சில மாதங்களுக்கு முன் வெளியாகி உள்ளது. கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் இந்த பாடல் ஏ.ஆர்.ரரஹமான் இசையில் பாடலாசிரியர் தாமரை வரிகளில் பதிவு செய்தது.

Also Read | தமிழ்ல செமயா பாடுறாங்களே 😍.. LATEST சூப்பர் ஹிட் SONG-அ பாடி அசத்திய அனுபமா பரமேஸ்வரன்!

தொடர்புடைய இணைப்புகள்

Siddhi Idnani comment about Anupama Parameshwaran Mallipoo Video

People looking for online information on Anupama Parameshwaran, Mallipoo song, Siddhi Idnani will find this news story useful.