www.garudabazaar.com
iTechUS

ஷாருக்கான் நடித்த 'பதான்'.. இந்தி சினிமா வரலாற்றில் முதல்நாளிலே அதிக வசூல்! இத்தனை கோடியா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Shahrukh Khan Pathaan Movie Day 1 Box Office Collection

Also Read | படிச்ச காலேஜ்க்கு போன நடிகர் விஜய் சேதுபதி.. 96 பட பாணியில் நெகிழ்ச்சி ..!

பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இன்று ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகி உள்ளது. 5 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த படமாக பதான் அமைந்துள்ளது.

பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமான பதான் படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆகி உள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸின் Spy Universe படங்களில் நான்காவது படமாக பதான் படம் வெளியாகி உள்ளது. முன்னதாக சல்மான் கான்  ஏக் தா டைகர் (2012),  டைகர் ஜிந்தா ஹே (2017) ,  ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வார் (2019) திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் பதான் படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பதான் படம் சாதனை படைத்துள்ளது.

Also Read | "சைவம் சாப்பிடுவறங்கள பாத்தாலே பாவமா இருக்கும்".. ரஜினி கலகல பேச்சு..!!

தொடர்புடைய இணைப்புகள்

Shahrukh Khan Pathaan Movie Day 1 Box Office Collection

People looking for online information on Box Office Collection, Deepika Padukone, Pathaan, Shah Rukh Khan will find this news story useful.