www.garudabazaar.com
iTechUS

Pathaan : உலகளவில் பிரம்மாண்ட சாதனை..! 2 நாட்களில் இவ்ளோவா? ஷாருக்கானின் 'பதான்' வசூல் வேட்டை..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Pathaan Movie Day2 worldwide Box Office Collection

பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இன்று ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகி உள்ளது. 5 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த படமாக பதான் அமைந்துள்ளது.

பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமான பதான் படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆகி உள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸின் Spy Universe படங்களில் நான்காவது படமாக பதான் படம் வெளியாகி உள்ளது. முன்னதாக சல்மான் கான்  ஏக் தா டைகர் (2012),  டைகர் ஜிந்தா ஹே (2017) ,  ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வார் (2019) திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படம் உருவாகி உள்ளது.

பதான் படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்தது.‌ இந்நிலையில் பதான் படம் முதல் இரண்டு நாளில் 219.6 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பதான் படம் ஏற்கனவே சாதனை படைத்துள்ளது. மேலும் பதான் படத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாள் வசூல் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pathaan Movie Day2 worldwide Box Office Collection

முதல்முறையாக முதல் இரண்டு நாளில் தொடர்ந்து 100+ கோடி ரூபாயை தினமும் வசூலித்த முதல் இந்தி படமாக பதான் படம் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pathaan Movie Day2 worldwide Box Office Collection

People looking for online information on Deepika Padukone, Pathaan, Pathaan Box Office, Shahrukh Khan will find this news story useful.