www.garudabazaar.com
iTechUS

WAR, பதான் பட இயக்குனருடன் இணையும் பிரபாஸ்?.. அடுத்த PAN INDIA படம் ரெடியாகுதா? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பிரபாஸ் & பதான் பட இயக்குனர் புதிய படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

Prabhas joining hands with Pathaan Sidharth Anand Deets

                      Images are subject to © copyright to their respective owners.

Also Read | "கணவருடன் இந்த ஆண்டின் முதல் பதிவு".. பிரபல வெளிநாட்டில் பஹத் & நஸ்ரியா சுற்றுலா..!

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகி உள்ளது

பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமான பதான் படம் யாஷ் ராஜ் பிலிம்ஸின் Spy Universe படங்களில் நான்காவது படமாக வெளியாகி உள்ளது.

Prabhas joining hands with Pathaan Sidharth Anand Deets

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக சல்மான் கான்  ஏக் தா டைகர் (2012),  டைகர் ஜிந்தா ஹே (2017) ,  ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வார் (2019) திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் ரா உளவு அமைப்பில் இருந்த ஜான் ஆபிரகாம் தேசத்திற்கு துரோகம் செய்யும் வகையில் அவரும் & அவரது குழுவினரும் இந்திய  விஞ்ஞானி ஒருவரை  குழு கடத்துகின்றனர். மேலும் சின்னம்மை நோயை இந்தியாவில் பரப்ப திட்டமிடுகிறார். இந்த சதியை ஷாருக்கான் எப்படி முறியடிக்கிறார் என்பதே பதான் படத்தின் கதைக்கரு.

Prabhas joining hands with Pathaan Sidharth Anand Deets

Images are subject to © copyright to their respective owners.

இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் 'பதான்' படத்தையும் இயக்கி உள்ளார்.  பதான் படம் உலகம் முழுவதும் இதுவரை 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

Prabhas joining hands with Pathaan Sidharth Anand Deets

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இயக்குனர் சித்தார்த் ஆனந்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் சந்தித்து அடுத்த படத்திற்காக அட்வான்ஸ் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய படத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டு முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | தளபதி 67 படத்தின் பூஜை.. கலந்து கொண்ட தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Prabhas joining hands with Pathaan Sidharth Anand Deets

People looking for online information on Pathaan, Shah Rukh Khan, Siddharth Anand will find this news story useful.