www.garudabazaar.com
iTechUS

"பதான் எனக்கு பிடிக்கல".. சிறுமியின் கியூட் வீடியோ.. நடிகர் ஷாருக் கானின் கலகல பதில்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனக்கு பதான் படம் பிடிக்கவில்லை என சிறுமி ஒருவர் சொல்லும் வீடியோவில் நடிகர் ஷாருக் கான் கமெண்ட் செய்திருக்கிறார்.

Sharukh Khan reply to kid who said she did not like pathaan

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "உங்களுக்காக தான் ஷாருக்".. ரசிகர் வரைந்த 'பதான்' ஓவியம்.. நடிகர் ஷாருக் கானின் வைரல் ட்வீட்.!

பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் ஷாருக் கான். கடந்த சில வருடங்களாக நடிப்பு உலகில் இருந்து விலகி இருந்த ஷாருக் பதான் திரைப்படத்தில் நடித்திருந்தார். பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் 'பதான்' இப்படத்தை இயக்கி இருந்தார்.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகியது. வருடக்கணக்கில் காத்திருந்த ஷாருக் ரசிகர்களுக்கு இந்த படம் பட்டாசான ட்ரீட்டாகவே அமைந்துள்ளது. படம் வெளியாகி முதல் 5 நாளில்  543 கோடி ரூபாய்களை இந்த படம் வசூல் செய்து இந்திய அளவில் சாதனையை படைத்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. உலகளவில் தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நேற்று நடிகர் ஷாருக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அவ்வப்போது #askSRK எனும் ஹேஷ்டாக் மூலமாக தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஷாருக் கான் பதிலளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று ரகர்களிடம் பல்வேறு கருத்துக்களை ஷாருக் கான் பகிர்ந்துகொண்டார்.

அப்போது அபிஷேக் குமார் என்பவர் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில் ஒரு சிறுமியிடம் "என்ன படம் பார்த்தாய்" என அருகில் இருப்பவர் கேட்க, "பதான்" என அந்த சிறுமி பதில் அளிக்கிறார். "படம் பிடித்திருந்ததா?" என அவர் மேலும் கேட்க, "இல்லை" என மழலை மொழியில் சிறுமி சொல்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இதுகுறித்து ஷாருக் செய்த கமெண்டில்,"ஓ.. நான் இப்போது கடினமாக உழைக்க வேண்டும். இளம் ரசிகர்களை ஏமாற்றமடைய விடக்கூடாது. இது நாட்டின் இளைய சமுதாயம் குறித்த விஷயம்" என குறிப்பிட்டு ஒருவேளை அந்த சிறுமி ரொமான்டிக் ரக படங்களை விரும்புவார் என நினைப்பதாகவும் அவருக்கு தன்னுடைய தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தினை பரிந்துரைப்பதாகவும் ஷாருக் கான் குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த கமெண்ட் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Also Read | பாரதியாக ‘அர்ஜூன் சார்’..! வேறொரு புதிய சீரியலில் நாயகியான ‘ரோஜா’ ஹீரோயின்.! விபரம்.

தொடர்புடைய இணைப்புகள்

Sharukh Khan reply to kid who said she did not like pathaan

People looking for online information on Pathaan, Shah Rukh Khan will find this news story useful.