Nenjuku Needhi

நடிகர் ஷாருக்கான் மகளின் பிறந்தநாள்.. வெளியான பெர்த் டே பார்ட்டி வைரல் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர்.

Shahrukh Khan daughter Suhana Khan birthday party images

Also Read | கமல்ஹாசனை கண்டதும் கண்ணீர் விட்டு அழுத ரசிகர்.. நெகிழ வைக்கும் வைரல் வீடியோ

நடிகர் ஷாருக்கானும், கௌரி கானும் அக்டோபர் 25, 1991 அன்று பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மே 22, 2000 அன்று, பெண் குழந்தை சுஹானா கான் பிறந்தார். சென்ற மே 22, 2022 அன்றுடன் சுஹானா கான் 22வது வயதை எட்டியுள்ளார். அப்போது நடந்த பிறந்தநாள் பார்ட்டியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த நண்பர்கள்  பார்ட்டியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Shahrukh Khan daughter Suhana Khan birthday party images

சுஹானாவுக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர் (ஆர்யன் கான் மற்றும் ஆப்ராம் கான்) . வெளிநாட்டில் திரைப்படக் கல்வி படித்த இவர், ஷாருக்கானின் ஜீரோ என்ற ஹிந்தி திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர்.

Shahrukh Khan daughter Suhana Khan birthday party images

சமீபத்தில் சுஹானா அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார். இவர் ஜோயா அக்தரின் நெட்ஃபிக்ஸ் ஒரிஜினல் படமான தி ஆர்ச்சீஸ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். 1960 களில் நடப்பது போல் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பிரபலமான ஆர்ச்சி காமிக்ஸின் தழுவலாகும். சமீபத்தில், ஷாருக்கான் இப்படத்தின் டீசரைின்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Shahrukh Khan daughter Suhana Khan birthday party images

ஷாருக்கான் வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

Shahrukh Khan daughter Suhana Khan birthday party images

இரண்டு வருடமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் முன்னோட்டமும் வெளியாகி உள்ளது. பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | இளையராஜா - ரஜினி காந்த் திடீர் சந்திப்பின் பின்னணி.. இதான் காரணமா? முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Shahrukh Khan daughter Suhana Khan birthday party images

People looking for online information on Shahrukh Khan, Shahrukh Khan daughter, Suhana Khan, Suhana Khan birthday party images will find this news story useful.