அட்லி - ஷாரூக்கான் இணையும் படத்தின் டைட்டில் சங்கியா ? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 31, 2019 09:33 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் , நயன்தாரா இணைந்து நடித்து கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் 'பிகில்'. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர்.
இதனையடுத்து இயக்குநர் அட்லி ஷாருக்கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்துக்கு சங்கி என்று பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி அந்த தகவல்கள் பொய்யானவை என்று தெரியவந்துள்ளது.
Tags : Atlee, Shah Rukh Khan, Bigil