Nenjuku Needhi

இளையராஜா - ரஜினி காந்த் திடீர் சந்திப்பின் பின்னணி.. இதான் காரணமா? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசைஞானி இளையராஜா ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார்.

Super star Rajinikanth Ilaiyaraaja Meeting Photos went Viral

Also Read | "விக்ரம்" ஸ்பெஷல் தண்ணீர் பாட்டில்.. பிரபல குடிநீர் நிறுவனத்தின் வேற லெவல் சம்பவம்!

சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர்.

அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரிக்க, ‘‘என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார்.

Super star Rajinikanth Ilaiyaraaja Meeting Photos went Viral

‘‘அப்படியா..நானும் அங்கே வருகிறேன்’’ என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார். ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த். 

Super star Rajinikanth Ilaiyaraaja Meeting Photos went Viral

இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இளையராஜாவிடம் இருந்து விடைபெற்று சென்றார்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் இளையராஜா ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Super star Rajinikanth Ilaiyaraaja Meeting Photos went Viral

Also Read | கமல்ஹாசனை கண்டதும் கண்ணீர் விட்டு அழுத ரசிகர்.. நெகிழ வைக்கும் வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Super star Rajinikanth Ilaiyaraaja Meeting Photos went Viral

People looking for online information on Ilaiyaraaja, Rajinikanth, Rajinikanth Ilaiyaraaja Meeting Photos, Super Star will find this news story useful.