RRR Others USA
www.garudabazaar.com

"நானும் விஜய் ரசிகன் தான்.." பீஸ்ட் டிரைலர் பற்றி ஷாருக்கான் ட்வீட்.. அட்லீ கொடுத்த ரியாக்ஷன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில், அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம், வரும் ஏப்ரல் 13 ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.

Shahrukh khan about beast trailer and atlee reacts

இத்திரைப்படத்தினை நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைத்துள்ளார்.

அவரது இசையில் ஏற்கனவே வெளியான 'அரபிக்குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய பாடல்கள், இன்றுவரை ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்களை ஆட்டம் போட வைத்து வருகிறது.

டிரைலரில் வரும் காட்சிகள்

இப்பாடலுக்கு பிறகு, படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி, படத்தின் டிரைலரும் வெளியாகி இருந்தது. இயக்குனர் செல்வராகவனும் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். டிரைலரில் அவரது வாய்ஸ் ஓவரில், காட்சிகள் செல்ல, இன்னொரு பக்கம் முழுக்க முழுக்க விஜய் பேசும் வசனங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை நிரம்பி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Shahrukh khan about beast trailer and atlee reacts

அதுமட்டுமில்லாமல், மாலுக்குள் வரும் காட்சிகளும், ஜெட் ஓட்டிக்கொண்டு விஜய் செய்யும் சாகசங்களும் திரைப்படத்தில் எப்படி இருக்கும் என்ற ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது. அதே போல, பீஸ்ட் படத்தின் டிரைலரை பிரபலங்கள் பலரும், தங்களின் சமூக வலைத்தளத்தில் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

பாலிவுட் பாட்ஷாவின் ட்வீட்

இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், பீஸ்ட் படத்தின் டிரைலர் குறித்து போட்ட ட்வீட்டும், அதற்கு அட்லீ கொடுத்த ரியாக்ஷனும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஷாருக்கான் தன்னுடைய ட்வீட்டில், "என்னைப் போல விஜய்யின் தீவிர ரசிகனான அட்லீயுடன் இணைந்து பீஸ்ட் டிரைலர் பார்த்தேன்" என குறிப்பிட்டு, டிரைலர் சிறப்பாக இருந்ததாக கூறி, தன்னுடைய வாழ்த்துக்களையும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

Shahrukh khan about beast trailer and atlee reacts

நன்றி சொன்ன அட்லீ

அட்லீ ஷாருக்கானை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கி வரும் நிலையில், தற்போது பீஸ்ட் குறித்து ஷாருக்கான் போட்டிருந்த ட்வீட் அதிகம் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, ஷாருக்கான் ட்வீட்டை பகிர்ந்த இயக்குனர் அட்லீ, "என்னோட அண்ணே, என்னோட தளபதி, விஜய் அண்ணாவின் பீஸ்ட் ஏப்ரல் 13 ரிலீஸ் ஆகிறது. ஷாருக்கான் சாரின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றிகள். எங்களுக்கு இது மிகவும் பெரியது. நன்றி! லவ் யூ சார்" என குறிப்பிட்டுள்ளார்.

Shahrukh khan about beast trailer and atlee reacts

நடிகர் விஜய்யை வைத்து, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களை அட்லீ இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Shahrukh khan about beast trailer and atlee reacts

People looking for online information on Atlee, Beast, Beast on April 13, Beast Trailer, Beast Update, Nelson Dilipkumar, Selvaraghavan, Shah Rukh Khan, Vijay will find this news story useful.