"பாப் பிஸ்வாஸ் கேரக்டரில் இவரா?" நெட்டிசன்கள் காட்டம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BIG B அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் KING KHAN ஷாருக் கானின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Abhishek Bachchan is roped in Bob Biswas movie produced by Shahrukh Khan

ஷாருக் கானின் சொந்த பட நிறுவனமான ரெட் சில்லீஸ் எண்டர்டெய்ன்மெண்ட், பவுண்ட் ஸ்க்ரிப்ட் புரடக்‌ஷனோடு இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு 'பாப் பிஸ்வாஸ்' என பெயர் சூட்டி உள்ளனர்.

2012ம் ஆண்டு வித்யாபாலனின் நடிப்பில் வெளியான கஹானியில் வரும் பாப் பிஸ்வாஸ் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி ஒரு SPIN OFF படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தை திவ்யா அன்னப்பூர்ணா கோஷ் இயக்குகிறார்.

இந்நிலையில், கஹானியில் பாப் பிஸ்வாசாக நடித்த சஸ்வதா சேட்டர்ஜியின் ரசிகர்கள் அபிஷேக் பச்சன் அந்த பாத்திரத்தில் நடிப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.