ஒரு வார்த்தைல தல, தளபதி பற்றி பஞ்ச் சொன்ன பாலிவுட் பாட்ஷா..!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 08, 2019 01:38 PM
பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் #AskSRK என்ற ஹேஷ்டேக் மூலம் உரையாடினார்.

அப்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும், பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வரும் தல அஜித் மற்றும் தளபதி விஜய் குறித்து ஷாருக்கானின் கருத்தை ரசிகர்கள் அவரிடம் எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஷாருக்கான் ஒரு வரிகளில் தல-தளபதி குறித்து விவரித்தார்.. தல அஜித்தை தனது நண்பர் என்றும், தளபதி விஜய்யை- Awesome என்றும் கூறினார்.
‘அசோகா’ என்ற பாலிவுட் படத்தில் நடிகர் ஷாருக்கான் மற்றும் தல அஜித் ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர். அதேபோல், தனியார் தொலைக்காட்சியின் விருது விழா ஒன்றுக்கு வந்திருந்த ஷாருக்கான் தளபதி விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தில் இடம்பெற்ற ‘I'm Waiting’ வசனத்தை பேசியதுடன், விஜய்யுடன் சேர்ந்து பாடலுக்கு நடனமும் ஆடி அசத்தியது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் வெளியான ‘ஜீரோ’ திரைப்படத்தில் குள்ள மனிதராக ஷாருக்கான் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான கதையை தேர்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். விரைவில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
My friend. https://t.co/0WFjM1FLca
— Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019
Awesome https://t.co/SLap0VhEpu
— Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019